இந்து தீவிரவாதம்: ஷிண்டேவை புறக்கணிக்க பாஜக முடிவு
டெல்லி: 'இந்து தீவிரவாதம்' என்று வர்ணித்த மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே பொது மன்னிப்பு கேட்கும் வரை அவரை புறக்கணிக்கப் போவதாக பாரதீய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
ஜெய்ப்பூரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய சுஷில் குமார் ஷிண்டே, பாரதீய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் இந்து தீவிரவாதத்தை பரப்புவதாக குற்றம்சாட்டினார். இந்த கருத்துக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் அவரை பொதுமன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கருத்துக்கு மன்னிப்பு கேட்கும் வரை ஷிண்டே அனுப்பும் அனைத்து அரசு கடிதங்களுக்கும் பதில் அனுப்பப்பட மாட்டாது என்று கூறியுள்ள பாரதிய ஜனதா, அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கருப்புக் கொடி காட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அதே சமயம் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அவர் பேசும் பாரதிய ஜனதா கட்சி இடையூறு செய்யாது என்று அக்கட்சி கருத்து தெரித்துள்ளது. மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது தங்கள் கட்சி அமளியில் ஈடுபடாது என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சிகளின் ஒத்தழைப்பு பெறும் பொறுப்பு ஷிண்டேவிற்கு உள்ளதால், பாரதிய ஜனதாவின் இந்த முடிவு மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications