டெல்லியில் மாணவர்களிடையே பேசும் மோடி! கிலியில் வியூகம் வகுக்கும் ராகுல் கோஷ்டி!!

Subscribe to Oneindia Tamil

Narendra Modi
டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி டெல்லியில் மாணவர்களிடையே உரையாற்றப் போகிறார் என்ற தகவல் ராகுல் ஆதரவு வட்டாரத்தை கிலி கொள்ள வைத்திருக்கிறது.

டெல்லி பல்கலைக் கழகத்துடன் இணைந்த கல்லூரியில் வரும் 6-ந் தேதியன்று மாணவர்களிடையே நரேந்திர மோடி உரையாற்ற இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் குஜராத்தின் வளர்ச்சிதான் மோடியின் மையக் கருத்தாம். அதாவது குஜராத் மாநிலத்தில் மக்கள் நலத் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படுகின்றன என்று அவர் விவரிக்க இருக்கிறார்.

மோடியில் டெல்லி பயணத்தால் இளைஞர்களின் பலத்தை அதிகம் நம்பும் ராகுல் ஆதரவாளர்களை கலக்கியிருக்கிறதாம். அண்மையில் டெல்லியில் மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு நீதி கோரி இளைஞர்கள் லட்சக்கணக்கில் திரண்டு பெரும் போராட்டமே நடத்தினர். இந்த இளைஞர்கள் எங்கே மோடியின் வளர்ச்சித் திட்டத்தால் வசீகரப்பட்டுவிடுவார்களோ என்று கருதுகிறதாம் ராகுல் தரப்பு.

இப்படி ராகுல் ஆதரவாளர்களை கலங்க வைக்கும் வகையில் மோடியை டெல்லிக்கு அழைத்ததில் முக்கிய பங்கு வகித்தது அருண் ஜேட்லி, விஜய் கோயல் போன்றோர்தான். இவர்கள் மோடி உரையாற்றப் போகும் கல்லூரியின் பழைய மாணவர்களாம்!

மோடியின் டெல்லி வருகையை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாகவும் டெல்லி மாணவர்களை ராகுல் பக்கம் திருப்புவதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்தும் ராகுலின் இளைஞர் பட்டாளத்துடன் அவரது நெருங்கிய நண்பரான ஜிதேந்தர்சிங் ஆலோசனையும் நடத்தி வருகிறாராம். குறிப்பாக அன்னிய முதலீட்டுக்கான அனுமதி, லோக்பால் மசோதா போன்ற விவகாரங்களில் இளைஞர்களிடம் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்ற வகையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வியூகம் வகுக்கப்படுகிறதாம்!

ராகுலோட தூக்கத்தை கெடுக்கிறாரே மோடி!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+