பெண்களே கவலைப்படாதீங்க… உங்களை பாதுகாக்க 'ஷேப்டி ஷாக்கர்' இருக்கு தெரியுமா?

பகல் நேர ஷிப்ட் மட்டுமல்லாது இரவு 10 மணிக்கு மேல் பணி முடிந்து திரும்பும் பெண்களும் பாதுகாப்பாக இருக்கவேண்டுமே? எவ்வளவுதான் ஜாக்கிரதையாக இருந்தாலும் ஏதாவது ஒருவிதத்தில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
டெல்லி மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு பின் நாடு முழுவதும் பெண்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்களும் பெண்களுக்கு பாதுகாப்பு தரும் ஷேப்டி ஷாக்கர் ஒன்றை கண்டுபிடித்துள்ளனராம்.
15 நாளில் கண்டுபிடிப்பு
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் பிரிவில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மணிகண்டன் (20), பரத்கிரண் (20).ஆகியோர் து 15 நாட்கள் முயற்சியில் ஒரு கருவியை செய்து முடித்துள்ளனர். இதற்கு ‘லேடீஸ் சேப்டி ஷாக்கர்' என பெயரிட்டுள்ளனர்.
எதிலும் ஈசியாக பொருத்தலாம்
60 கிராம் எடையுள்ள இக்கருவியை பெண்கள் தலையில் கிளிப் போல் மாட்டிக் கொள்ளலாம். குடை, கீசெயின், செல்போன் பவுச் ஆகியவற்றிலும் பொருத்திக் கொள்ளலாம். இந்த கருவியில் 3 பேட்டரிகள் உள்ளன. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் நீண்ட நாட்களுக்கு தாக்குப்பிடிக்கும்.
நிலை குலையும் எதிரிகள்
இந்த கருவியில் 2 பட்டன்கள் உள்ளன. முதல் பட்டனை அழுத்தினால் அபாய ஒலி எழுப்பும். இந்த ஒலி சுமார் 20 மீட்டர் தூரம் கேட்கும்.கருவியை எதிரியின் உடலில் படும்படிவைத்து 2வது பட்டனை அழுத்தினால், அவர் மீது 1,700 வோல்ட் மின்சாரம் தாக்கிவிடும். இதனால் எதிரி நிலைகுலைந்துவிடுவார். ஆனால், அவரது உயிருக்கு எந்த ஆபத்து ஏற்படாது. இக்கருவியை வெயிலில் ரீசார்ஜ் செய்யும் வசதியும் உண்டு.
பாதுகாப்புக்கு வேற என்ன வச்சிக்கலாம்
ஷாக்கர் வாங்க முடியாத பெண்கள் தங்களின் ஹேண்ட் பேக்கில் எப்போதுமே பாதுகாப்பிற்கு சில பொருட்களை வைத்துக்கொள்வது அவசியம். அது குடையாகவோ, பேனா கத்தியாகவோ, வாட்டர் பாட்டிலாகவோ இருக்கலாம். சின்னதாக ஒரு டப்பாவில் மிளகாய்த்தூளை நிரப்பியும் எடுத்துச் செல்லலாம். அது எல்லாவற்றையும் விட கழுத்தில் போட்டிருக்கும் செயினில் ஷேப்டி பின் மாட்டிக்கொண்டு செல்லுங்கள். அதை எதிரியின் கண்களிலோ, முகத்திலோ குத்தி கிழித்துவிடலாம் என்கின்றனர் அனுபவசாலிகள்.












Click it and Unblock the Notifications