தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க மறுத்து கர்நாடகா அடம்! மறுபரிசீலனை மனு செய்ய முடிவு!
பெங்களூர்: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க கர்நாடக அரசு மறுத்துவிட்டது. மேலும் உச்சநீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி மனு தாக்கல் செய்யவும் கர்நாடகா முடிவு செய்துள்ளது.
பெங்களூரில் கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக மாநில குடிநீர் தட்டுபாடு பற்றி விவாதிக்கப்பட்டது. தமிழகத்திற்கு 2.44 டி.எம்.சி நீரைத் திறந்து விட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை பரிசீலிக்கக் கோரும் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
கிருஷ்ணராஜசாகர் அணையில் 7 டி.எம்.சி. தண்ணீரும், கபினி அணையில் ஒரு டி.எம்.சி. தண்ணீரும் இருப்பதாலேயே தமிழகத்துக்கு நீரை திறந்துவிட முடியாது என்பது கர்நாடகாவின் நிலைப்பாடு.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்கவும் கர்நாடக எம்.பிக்கள் முடிவு செய்துள்ளனர்.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications