For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பலத்த காவலையும் தாண்டி ராஜபக்சேவுக்கு கருப்புக் கொடி கொட்டிய மதிமுகவினர்

Google Oneindia Tamil News

MDMK cadres show black flags to Rajapakse
சென்னை: திருப்பதிக்கு வந்த ராஜபக்சே, அங்கிருந்து கிளம்பி காரில் வந்தபோது, வழியில் திருமலா சாலையில், பலத்த காவலையும், தடுப்பையும் தாண்டி மதிமுகவினர் திரண்டு வந்து திடீரென கருப்புக் கொடி காட்டியதால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

ராஜபக்சே இதற்கு முன்புஇந்தியா வந்தபோது கிடைத்த எதிர்ப்புகளை விட இந்த முறை அதிகமாகவே சந்தித்து விட்டார். இதனால் அவரது பயணத் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை திருப்பதியிலிருந்து காலை கிளம்ப வேண்டிய அவர் மதிமுகவினரின் தொடர் போராட்டங்கள் காரணமாக பிற்பகல் 12.15மணிக்கு மேல் கிளம்பி காரில் வந்தார்.

அப்போது வரும் வழியில் திருமலா சாலையில் ஒரு ஸ்டேட் பாங்க் ஏடிஎம் அருகே திடீரெனதிரண்ட மதிமுகவினர் கருப்புக்கொடிகளை ராஜபக்சேவுக்குக் காட்டி போராட்டம் நடத்தினர். ராஜபக்சேவைக் கண்டித்தும் கோஷமிட்டனர். இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

ராஜபக்சேவுக்கு வெகு அருகே கருப்புக் கொடி காட்டப்பட்டதால் அந்த இடத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. இப்போராட்டத்தி்ல மதிமுகவைச் சேர்ந்த கலையரசன், டிவி. சிவக்குமார், என்கேபி பாலமுருகன், கே.பி.ராஜா, கே.சிபிராஜ், மு.ரவிச்சந்திரன், இ.கதிர்வேல், எம்.ராஜகோபால், வி.கேசவன், ஜெயக்குமார், பொம்முராஜ், தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் என்று மதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

English summary
MDMK cadres showed black flags to Lankan president Rajapakse on Thirumala road, near Thirupathi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X