6 வயது சிறுமியை கற்பழித்த 12 வயது சிறுவன் கைது!
போபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுமியை கற்பழித்த 12 வயது சிறுவனை போபால் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
போபாலில் உள்ள கிரண் நகர் பகுதியில் சிறுமி ஒருத்தி காணாமல் போனதைடுத்து அவளின் பெற்றோர் தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அவள் பக்கத்து வீட்டு சிறுவனுடன் இருப்பதை கண்ட பெற்றோர் அவளை வீட்டிற்கு அழைத்து வந்தனர். அப்போது அந்த சிறுமி அழுது கொண்டே வந்தாள்.
இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் அவளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்திய குற்றவியல் சட்டம் விதி 376 (கற்பழிப்பு)பிரிவின் கீழ் அச் சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications