நல்ல பையனா இருங்க… நிருபருக்கு அட்வைஸ் செய்த ஜெ.

காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது தொடர்பாக நேற்று சென்னை கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா செய்தியாளர்களை சந்தித்தார். காவிரி நீர் விவகாரம் தொடர்பாக நீண்ட விளக்கம் அளித்தார்.
"காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள சம்பவம், எனது 30 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் சாதனை புரிந்த மனநிறைவை ஏற்பட்டுள்ளது.
எனக்கும், தமிழக அரசுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி. காவிரி நதி நீர் ஆணைய தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதால் விவசாயிகளின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனிமேல் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் தர மறுக்க முடியாது" என்றார்.
பேட்டியை முடிக்கும்போது ஆங்கில பத்திரிகையின் நிருபர் ஒருவர், சப்ஜெக்ட் தாவி, "வீரப்பன் கூட்டாளிகள், தூக்கு தண்டனைக்கு எதிராக அப்பீல் சென்றுள்ளனரே?" என்று கேட்டார். அதற்கு முதல்வர் ஜெயலலிதா, "be a good boy today" என்று சிரித்தபடியே கூறினார். இதைக் கேட்டதும் எல்லா செய்தியாளர்களும் சிரித்தனர்.
அந்த நிருபரும் சிரித்தபடி, நல்ல பையனாக ‘குட் பை' சொல்லிவிட்டு பத்திரிகை அலுவலகம் சென்றார்.












Click it and Unblock the Notifications