கட்டண சீட்டு வாங்கி மீனாட்சி அம்மனை தரிசித்த ராஜாத்தி அம்மாள்
மதுரை: தி.மு.க தலைவர் மு. கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.விஐபிக்களுக்கான சலுகையை ஏற்றுக்கொள்ளாமல் கட்டணம் செலுத்தி தரிசனம் செய்தாராம் ராஜாத்தி அம்மாள்.
ராஜாத்தி அம்மாள், நேற்று காலை, 9:00 மணிக்கு, விமானம் மூலம் மதுரை வந்தார். விஜயா தாயன்பன் உட்பட, நான்கு பேர், அவருடன் வந்தனர்.
காலை, 10:00 மணிக்கு, பிள்ளையார்பட்டிக்கு சென்று, விநாயகர் கோயிலில், மதியம், 12:00 மணி வரை தரிசனம் செய்தார். மாலை, 4:00 மணிக்கு வி.ஐ.பி.,க்கள் செல்லும் வழியை தவிர்த்து, 100 ரூபாய் சிறப்பு தரிசன கட்டண சீட்டு வாங்கி, தரிசனம் செய்தார்.
அங்கு, கனிமொழி உட்பட குடும்பத்தினர் பெயருக்கு, சிறப்பு அர்ச்சனை செய்தார். அவருடன் வந்தவர்களும், சிறப்பு தரிசன கட்டண சீட்டு பெற்றே, தரிசனம் செய்தனர். மாலை, 4:15 மணி வரை கோவிலில் இருந்த அவர், பின் விமான நிலையம் சென்று, அங்கிருந்து சென்னை கிளம்பி சென்றார். அவர்களது வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் மட்டும் விமான நிலையம் சென்று வரவேற்று அழைத்து வந்தனர். பின்னர் வழியனுப்பச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
