சுரண்டையில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த வாலிபரை தேடும் போலீசார்
நெல்லை: சுரண்டையில் அரிவாளுடன் வாலிபர் ஒருவர் கொலை வெறியுடன் சுற்றித் திரிந்ததால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் சிதறி ஓடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் சுரண்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் சுரண்டை பேருந்து நிலையத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பைக்கில் வந்தார். சட்டை அணியாமல் லுங்கியும், கருப்பு கலரில் கைப்பனியனும் அணிந்திருந்தார். அவர் கையில் நீண்ட அரிவாளை வைத்து கொண்டு சத்தமிட்டப்படி அங்கும் இங்கும் பரபரப்பாக சுற்றித் திரிந்தார். இதனால் அங்கு நின்ற பெண்கள், மாணவ, மாணவிகள் அலறி அடித்து ஓடினர். அந்த வாலிபர் பேருந்து நிலையம், மார்க்கெட், பஜார் பகுதியில் அரிவாளை வீசியபடியே வந்தார். இது குறித்து சுரண்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் வருவதற்குள் அந்த வாலிபர் தலைமறைவானார்.
வடமாநிலத்தைச் சேர்ந்தவர் போன்ற தோற்றம் கொண்ட அந்த வாலிபரின் பனியனில் இந்தி வார்த்தை எழுதப்பட்டிருந்தது. அவர் யார், எந்த ஊர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். யாரையாவது கொலை செய்யும் நோக்கத்தில் அவர் சுரண்டை வந்தாரா, அல்லது குடிபோதையில் அரிவாளை சுழற்றி பந்தா காட்டினாரா என தெரியவில்லை. இந்த சம்பவத்தால் சுமார் 1 மணி நேரம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications