லோக்சபா, சட்டசபை தேர்தல்கள்- வியூகம் வகுக்கக் கூடுகிறது பாஜக தேசிய செயற்குழு!
டெல்லி: லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களுக்கான வியூகம் வகுக்க பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது.
தென்னிந்தியாவில் முதல் முறையாக கர்நாடகாவில்தான் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜக தலைமையிலான கர்நாடகா அரசின் பதவிக் காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதேபோல் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம் மற்றும் டெல்லி மாநில சட்டசபைகளின் பதவிக் காலமும் முடிவடைகிறது. இதனால் இந்த மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதேபோல் லோக்சபா தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடத்தப்படக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தல்களை எதிர்கொள்வதற்கான வியூகம் வகுக்க பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் தேர்தல்கள் வியூகங்களுடன் அசாம் வன்முறை, சேது சமுத்திர விவகாரம், பொருளாதார நெருக்கடி ஆகியவை பற்றியும் விவாதிக்கப்பட இருக்கிறது.
குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்திருக்கும் முதல்வர் நரேந்திர மோடிதான் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என்று கூறப்படும் நிலையில் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications