விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் - பங்கேற்கிறார் வைகோ
Subscribe to Oneindia Tamil

இதுபற்றி செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில், "தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால், விவசாயிகள் துயரத்தில் உள்ளனர். விவசாயம் அடியோடு நொறுங்கி கிடக்கிறது. உரம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. குறுகிய காலகட்டத்தில் 4 முறை உரவிலையை ஏற்றியுள்ளனற். இது மன்னிக்க முடியாத குற்றம்.
இந்த துயரங்களைத் தாங்காமல் 13 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
சாகுபடி நிலங்களுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய்; பாசனம் இல்லாத நிலங்களுக்கு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கக் கோரி மார்ச் 12-ல், விருதுநகரில் உண்ணாவிரதம் நடக்கிறது.
இதில் நானும் கலந்து கொள்ளப் போகிறேன்.
இத்தனை கஷ்டத்தில் உள்ள விவசாயி கடன்களை எப்படிக் கட்டுவான். எனவே உடனடியாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய, மத்திய- மாநில அரசுகள் முன்வர வேண்டும்," என்றார்.












Click it and Unblock the Notifications