அறிவாலயம் சரி, தாயகம் கூட ஓ.கே.தான்.. அது என்ன இலட்சியகம்?
சென்னை: கட்சிக்குப் பெயர் வைப்பது போலவே கட்சி ஆபீஸுக்குப் பெயர் வைப்பதும் இப்போது ரொம்ப மெனக்கெட வேண்டிய விஷயமாகியுள்ளது.
ஒவ்வொரு கட்சிக்கும் கேட்ச்சியான பெயர், கொடி, பன்ச் லைன் என பட்டையைக் கிளப்புவது தமிழகம் மட்டுமே. விதம் விதமான பெயர்களைப் பார்க்க இங்கு மட்டுமே முடியும். அந்த வகையில் நமது அரசியல்வாதிகள் கின்னஸ் சாதனைக்கும் அப்பால் போய் விட்டவர்கள்.
ஆனால் கட்சிக்கும், கட்சி அலுவலகங்களுக்கும், கட்சி பத்திரிகைகளுக்கும் அவர்கள் வைக்கும் பெயர்கள்தான் ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது.

திமுகவுக்கு முரசொலி
திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையாக முரசொலி விளங்குகிறது. இதே பாணியில்தான் வைகோ தனது பத்திரிக்கைக்கும் பெயர் வைத்தார்.

மதிமுகவுக்கு சங்கொலி
திமுகவிலிருந்து வெளியேறிய பின்னர் தனது கட்சியின் பெயரை மதிமுக என்று வடிவமைத்த வைகோ, கட்சிப் பத்திரிக்கைக்கு முரசொலி பாணியில், சங்கொலி என்று வைத்தார். அதை திமுகவினர் கிண்டலடிக்கவும் தவறவில்லை என்பது தனிக்கதை.

அண்ணா அறிவாலயம்
இது திமுக தலைமைக் கழக அலுவலகத்தின் பெயர். இந்தப் பெயரைச் சூட்டியவர் கருணாநிதி. உலகத் தமிழர்கள் மனதில் பளிச்சென பதிந்து போய் விட்ட பெயரும் இது.

கலைஞர் அறிவாலயம்
இது மாவட்டந்தோறும் கட்டப்பட்டு வரும் திமுக மாவட்ட தலைமைக கழக அலுவகத்திற்குச் சூட்டப்படும் பெயராகும். இந்தப் பெயரை உருவாக்கியது முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு என்கிறார்கள்.

தாயகம்
இது மதிமுக தலைமைக் கழக அலுவலகத்தின் பெயர். வைகோ தலைமையிலான இந்த அலுவலகத்தின் பெயரும் மக்கள் மனதில் பதிந்த பெயராகும்.

டி.ஆரின் இலட்சியகம்
இந்த வரிசையில் இலட்சிய திமுக என்ற பெயரில் கட்சி நடத்தி வரும் டி.ராஜேந்தர் தனது கட்சி அலுவலகத்திற்கு வைத்துள்ள பெயர்தான் இலட்சியகம். இந்தப் பெயருக்கு என்ன அர்த்தம் என்பதுதான் விளங்கவில்லை.

இலட்சியமகம்னு வச்சுருக்கலாமோ...?
இலட்சியகம் என்பது என்ன மாதிரியான தமிழ் வார்த்தை என்பது புரியவில்லை. ஒரு வேளை கட்சியின் பெயரான இலட்சிய என்பதை தூக்கி கூட கம் சேர்த்து ஒட்டி விட்டாரோ என்றும் தோன்றுகிறது. அதேசமயம், இலட்சியமகம்னு வைத்திருந்தால் சரியாக இருந்திருக்குமோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

வாய் தடுக்குமேன்னு விட்ருக்கலாம்!
ஆனால் இலட்சியமகம் என்று பெயர் வைத்தால் சொல்லும்போது வாய் தடுக்கி விழுந்து விடலாம் என்ற எண்ணத்தில் அதைத் தவிர்த்திருக்கலாமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
சத்யராஜ் நடித்த ஒரு படத்தில் ஜனகராஜ் ஒரு வசனம் சொல்வார்...என்னவோ போடா...அதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.












Click it and Unblock the Notifications