ராஜஸ்தானில் நிலம் வாங்கி குவித்த ராபர்ட் வதேரா: சி.பி.ஐ. விசாரிக்க பாஜக கோரிக்கை

இதுபற்றி நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவாதம் நடத்த வேண்டும் என பாரதீய ஜனதா கட்சி கோரி நேற்று அமளியில் ஈடுபட்டது. ஆனால் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முடியாது என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரேணுகா சவுத்ரி டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ராபர்ட் வதேரா அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு தனிப்பட்ட நபர். நாடாளுமன்றம் இதன்மீது எதற்காக விவாதிக்க வேண்டும்? இது நாடாளுமன்ற விவாதத்துக்கு எப்படி தகுதி பெறும்? நாங்கள் தனிப்பட்ட நபர் மீதான பிரச்சனையில் விவாதம் நடத்தி முன்னுதாரணம் ஏற்படுத்த விரும்பவில்லை என்றார்.
ஆனால் அடுத்த கட்டமாக, வதேரா நிலம் வாங்கிய விவகாரத்தை நீதிமன்ற கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்று பாஜக வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவேத்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ராபர்ட் வதேரா நிலம் வாங்கிய விவகாரம் ஒரு தனி நபர் தொழில் நடத்த நிலம் வாங்குவது என்ற நிலைக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. அரசின் கொள்கைகள் தனி நபருக்காக என்பது போல செயல்பட்டுள்ளனர். எனவே ராபர்ட் வதேராவின் நிலபேரங்கள் தொடர்பாக நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றார்.
இதற்கு முன்னரும் வதேரா மீது காங்கிரஸ் ஆளும் ஹரியாணா மாநிலத்தில் முறைகேடாக நிலங்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா!












Click it and Unblock the Notifications