பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்: சோனியா உறுதி
Subscribe to Oneindia Tamil

மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது:
பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனையை கடுமையாக்கும் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது. இந்த சட்ட மசோதா விரைவில் நிறைவேற்றப்படும்.
பெண்களின் உரிமைகளை காக்கவும், அவர்கள் முன்னேற்றம் அடையவும் பல்வேறு நடவடிக்கைகளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்து வருகிறது.
நிர்பயா நிதி என்ற பெயரில் ஒதுக்கப்பட்டுள்ள ஆயிரம் கோடி ரூபாய் நிதி பெண்களின் பாதுகப்புக்காக பயன்படுத்தப்படும் என்றும் சோனியா காந்தி கூறினார். ஏழை மக்களை காக்கும் வகையில் உணவு பாதுகாப்பு சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று அப்போது சோனியா உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications