மொத்தம் 4,53,0000 கோடி இந்தியா வருது.. அமேசானால் அடித்த பெரிய ஜாக்பாட்.. தட்டித்தூக்கிய பிரதமர் மோடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் அமெரிக்காவின் பிரபல ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் , 2026 முதல் 2030 வரையிலான 4 ஆண்டு காலத்தில் இந்தியாவில் 48 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 4,53,000 கோடி) முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் சிஇஓ நேற்று ஆண்டி ஜாஸி நேற்று பிரதமர் மோடியை சந்தித்த பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தற்போது உலகமே டிஜிட்டல் துறையை நம்பி தான் இயங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிஜிட்டல் துறை பல்வேறு வளர்ச்சிகளை எட்டி வருகிறது. இதனால் ஒவ்வொரு நாடுகளும் டிஜிட்டல் துறையை மையப்படுத்தி முதலீடுகளை பெருக்க முயன்று வருகின்றன. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.

Amazon

பெரிய பெரிய நிறுவனங்களின் டேட்டா சென்டர்கள் உள்பட பல்வேறு வகைகளில் முதலீடுகளை ஈர்க்க மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டு வருகின்றன. இந்நிலையில் தான் உலகின் முன்னணி ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியாவில் பெரும் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஆண்டி ஜாஸி நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு தான் இந்த அறிவிப்பு வெளியானது. அதன்படி அமேசான் நம் நாட்டில் 2026 முதல் 2030ம் ஆண்டு வரையிலான 4 ஆண்டில் மொத்தம் 48 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. 48 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில் சுமார் ரூ.4 லட்சத்து 53 ஆயிரத்து கோடியாகும்.

இந்த புதிய முதலீட்டு திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக கூடுதலாக 13 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அமேசானின் மொத்த தொழில்நுட்ப கட்டமைப்பு சார்ந்த முதலீடு 21 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது புதிய மைல்கல்லாகும். இதன்மூலம் நம் நாட்டின் மிகப்பெரிய உலகளாவிய ஏஐ மற்றும் கிளவுட் முதலீட்டாளர்களில் அமேசான் மற்றும் கிளவுட் முதலீட்டாளர்களில் ஒன்றாக அமேசான் பெயர் பெற்றுள்ளது.

இதுபற்றி அமேசான் சிஇஓ ஆண்டி ஜாஸி கூறுகையில், ''நாங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்ப இந்தியாவில் முதலீடு செய்ய தொடங்கிவிட்டாம். அன்று முதல் எங்களின் பல்வேறு வணிகங்கள் மூலம் வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், டெவலப்பர்கள், ஸ்டார்ட்-அப்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சேவை செய்து வருகிறோம். எங்களது ஈ-காமர்ஸ், ஏஐ மற்றும் கிளவுட் வணிகங்களில் ஏற்பட்டுள்ள அசாத்திய வளர்ச்சியின் காரணமாக இந்திய சந்தையில் எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தியாவில் எங்களது வணிகங்களுக்கான வலுவான தேவையை பூர்த்தி செய்யவும், நாட்டின் முக்கியமான இலக்குகளை அடையவும் அடுத்த 5 ஆண்டுகளில் நாங்கள் 48 பில்லியன் டாலருக்கும் (ரூ.4.53 லட்சம் கோடி) அதிகமாக முதலீடு செய்கிறோம். பிரதமர் நரேந்திர மோடியின் விக்சித் பாரத் (Viksit Bharat) மற்றும் ஆத்மநிர்பர் பாரத் (Atmanirbhar Bharat) உள்ளிட்ட தொலைநோக்கு பார்வை திட்டங்களால் நாங்கள் ஈர்க்கப்பட்டுள்ளோம். இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் ஒரு நீண்டகால பங்காளியாக இருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்'' என்றார்.

இந்தியாவில் ஈ-காமர்ஸ், ஏஐ, கிளவுட் கம்ப்யூட்டிங் உள்பட பிற வணிகங்களை அமேசான் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, ஈ-காமர்ஸ் மற்றும் ஏடபிள்யூஎஸ் (AWS) பிரிவுகளில் வாடிக்கையாளர்களின் ஆதரவு தொடர்ந்து அமேசானுக்கு அதிகரித்து வருகிறது. நம் நாட்டில் அமேசான் இதுவரை 1 கோடியே 20 லட்சம் சிறு வணிகங்களை டிஜிட்டல் மயமாக்கி உள்ளது. சுமார் 28 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளது. தொழில்நுட்பத் துறையில் முன்னேற துடிக்கும் 1 கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு கிளவுட் தொழில்நுட்ப திறன் சார்ந்து பயிற்சி அளித்துள்ளது.

ஈ-காமர்ஸ் ஏற்றுமதியை 20 பில்லியன் டாலருக்கும் அதிகமாக்கி உள்ளது. மேலும் எதிர்காலத்தில், மொத்தம் 38 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், ஒட்டுமொத்த ஏற்றுமதியை 80 பில்லியன் டாலராக உயர்த்தவும் அமேசான் திட்டமிட்டு இந்த முதலீட்டை தொடங்க உள்ளது. இதில்1.50 கோடி சிறு வணிகங்களுக்கு ஏஐ நன்மைகளை கொண்டு செல்லவும்,40 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏஐ கல்வி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இது நம் நாட்டுக்கு பெரிய ஜாக்பாட்டாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+