பெங்களூரில் பிரபல நடிகை வீட்டில் சடலமாக கிடந்த தொழிலதிபர்.. என்ன நடந்தது?
பெங்களூர்: பெங்களூரில் நடிகை கிரிஷி தபண்டாவின் வீட்டில் தொழிலதிபர் வைஷாக் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்தபோது நடிகை வீட்டில் இல்லாததாக போலீசார் தெரிவித்துள்ள நிலையில், மரணத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
பெங்களூரை சேர்ந்த தொழிலதிபரான வைஷாக் என்பவர், பிரபல கன்னட நடிகை கிரிஷி தபண்டா வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். பெங்களூர் ரஜராஜேஸ்வரி நகரில் உள்ள நடிகை கிரிஷா தபாண்டா வீட்டில் ஒரு வாரமாக வைஷாக் தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று 8.30 மணியளவில் வைஷாக் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்தார்
எனினும் தற்கொலை கடிதம் எதுவும் சிக்கவில்லை. நடிகை கிரிஷி, எலஹங்காவில் இருப்பதாகவும், இந்த தற்கொலை நிகழ்வின் போது, வீட்டில் இல்லை என்றும் முதல் கட்ட விசாரணையின் போது போலீசார் தெரிவித்துள்ள்னர். வைஷாக்கின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரதே பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வைஷாக் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தாகவும் இதற்காக மருத்துவ சிகிச்சை எடுத்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மனைவியை விட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக பிரிந்து வாழ்ந்த வைஷாக், சொந்த பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் சதி செயலா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வைஷாக் ஏற்கனவே ஒரு வழக்கு தொடர்பாக போலீஸ் கண்காணிப்பு வளையத்தில் இருந்துளார். வழக்கற்றிஞர் அரவிந்த் ரெட்டி என்பவரிடம் மிரட்டி பணம் பறிக்க முயற்சித்த வழக்கு அவர் மீது இருந்தது.
வேறு ஏதேனும் சதிச்செயலா?
கடந்த பிப்ரவரி மாதம் அரவிந்த் ரெட்டியிடம் 6 - 7 கோடி பணம் மற்றும் மன்னிப்பு கடிதம் கேட்டு கொரியர் ஒன்று அனுப்பப்பட்டு இருந்தது. இந்த விவகாரத்தில், வைஷாக்கின் பெயர் அடிபட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் வைஷாக்கை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது பெண் ஒருவருடனான பிரச்சினை விவகாரத்தில் இந்த கடிதத்தை அனுப்பியதாக வைஷாக் கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக 5 நாள் காவலில் எடுத்து வைஷாக்கிடம் போலீசார் விசாரணை நடத்தினர். எனினும், கர்நாடக நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது.
வைஷாக்கின் மரணம் தொடர்பாக ராஜராஜேஷ்வரி நகர் காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்வார்கள் எனத்தெரிகிறது. வைஷாக் உயிரிழப்புக்கு உண்மையிலேயே என்ன காரணம்? தற்கொலை தான் செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் சதிச்செயலா? என்பது குறித்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகிறார்கள்.
யார் இந்த கிரிஷி தபண்டா?
மாடல் நடிகையான கிரிஷி தபண்டா, 2014ல் மிஸ் கர்நாடகா பட்டம் வென்றவர். பல கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். 2016ல் வெளியான அகிலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கிரிஷி தபண்டா. கலர்ஸ் சூப்பர் சேனலில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராகப் பங்கேற்றார். கஹி, எராடு கனசு, இரா, கன்னக்காகி ஒண்டன்னு ஓட்டி, பாரதே, லன்ஹ்கே, கானா ஆகிய கன்னட படங்களில் நடித்துள்ளார் கிரிஷி தபண்டா.












Click it and Unblock the Notifications