சனி வக்ர பெயர்ச்சியால் இந்த 6 ராசிகளுக்கு ராஜயோகம்.. 138 நாட்கள் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!
சனி வக்ர பெயர்ச்சி பலன்: நீதிமான், கர்மக்காரகன் என்று அழைக்கப்படும் சனி பகவான் ஜூலை 27 ஆம் தேதி வக்ர பெயர்ச்சி அடைகிறார். டிசம்பர் 11 ஆம் தேதி கார்த்திகை மாதம் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். கிட்டத்தட்ட 138 நாட்கள் சனி பகவான் பின்னோக்கி பயணம் செய்கிறார். இதனால், சில ராசிக்காரர்களுக்கும் ராஜயோகம் கிடைக்கப் போகிறது. இந்த சனி வக்ர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசியினர் குறித்து பார்க்கலாம்.
சனி பகவான் மந்த காரகன், நீதிமான் மற்றும் கர்ம வினைகளைத் தீர்ப்பவர் என்று போற்றப்படுகிறார். மனிதன் தன் வாழ்வில் செய்யக்கூடிய நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ப எந்தவித பாரபட்சமுமின்றி பலன்களை வழங்குபவராக சனி பகவான் விளங்குகிறார். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அவரவர் செய்த கர்மங்களுக்கு ஏற்ப பலனை அளிப்பதால் சனிப்பெயர்ச்சி, சனி வக்ர நிலைகள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

சனி வக்ர பெயர்ச்சி
வரும் ஜூலை 27 ஆம் தேதி முதல் சனி பகவான் வக்ர கதி அடைந்து பயணிக்கவுள்ளார். இந்த கிரக மாற்றம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சனி வக்ர நிலையில் இருக்கும் காலத்தில் அதன் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படும். இதில், சில ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகிறது உங்கள் ராசி இருக்கா பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு 11 ஆம் இடத்தில் இருந்த சனி பகவான் 10 ஆம் இடத்திற்கான ஆதிபத்தியத்தை பெறுகிறார். 10 ஆம் இடம் பெரியளவில் பாதிக்கப்படாது. சொந்த தொழில் செய்பவர்களுக்கு எந்த வித பாதிப்புகளும் ஏற்படாது. சொந்த தொழில் செய்வதற்கான திட்டமிடுவோருக்கு அற்புதமான காலகட்டம். 10 ஆம் இடம் என்பது கர்மகாரியத்தை குறிக்கக் கூடியது. உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியில் 100 சதவீத ரிசல்டை கொடுக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்யும் அமைப்பு ஏற்படும். பொறுப்புகள் கூடும். நிறைய பாரமான விஷயங்கள் உங்கள் மேல் திணிக்கப்படும். என்ன செய்தாலும் பத்தவில்லை என்று உங்களை குறைசொல்ல ஆரம்பிப்பார்கள். உங்களை டென்ஷனாக்கி எமோஷலனாக பேச வைப்பார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில் நீங்கள் பொறுமை, நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு வக்ர சனியாக இருக்கக்கூடியவர் 9 ஆம் இடத்தில் அமர்கிறார். 9 ஆம் இடத்தில் இருந்து கொண்டு 11 ஆம் இடத்தைப் பார்ப்பதால் வரும் லாபங்களை சேமித்து வைத்துக் கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். செலவுகளைக் குறைத்து கொள்ள வேண்டும். பணம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனமாகவும் கறாராகவும் இருக்க வேண்டும்.
சிலருக்கு நல்ல இடமாற்றங்கள் உண்டாகும். தூரமான பகுதிகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்கள் செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படும். விவசாயம் செய்யக்கூடியவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். இயற்கைத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபங்கள் கிடைக்கும். மிதுனத்திற்கு 3 ஆம் இடத்தை சனி பகவான் பார்க்கிறார். சனி 3 ஆம் பார்வையால் முயற்சிகளில் நிறைய தொய்வுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
உள்ளார்ந்த வேகம், விவேகம் குறைவதற்கான வாய்ப்புள்ளது. எதிரிகள், நோய்கள், கடன்கள், சட்டம், வழக்கு, துன்பம் போன்றவற்றை தவிர்ப்பதற்கோ, விலகி செல்வதற்கோ வாய்ப்புகள் வந்து சேரும். நீதிமன்றம், வழக்கு என்று அழைந்து கொண்டிருந்தவர்கள் இந்த காலகட்டத்தில் அமர்ந்து பேசி பிரச்சனையை தீர்ப்பீர்கள். உறவுகளுடனான பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும்.
கடகம்
கடக ராசியினருக்கு சனி பகவானின் வக்கிர சனியானது மீண்டும் அஷ்டமத்து சனியை நினைவுபடுத்தும். கடந்த இரண்டரை ஆண்டுகளில் உடம்பால், மனதால், வருமானத்தால், உறவினர்களால், குடும்பத்தினரால், சக ஊழியர்களால் பட்ட கஷ்டம் எல்லாம் மீண்டும் வரும் 138 நாட்களுக்கு வரக்கூடிய அமைப்புள்ளாதல் மிகுந்த கவனம் தேவை. இந்த காலத்தில் எல்லாவற்றிற்கும் தயாராக இருப்பது நல்லது.
நிறைய நன்மைகளை கிடைக்கும். செழிப்பும், வெற்றியும் உண்டாகும் காலகட்டம். அரசியலில் செல்வாக்கு உயரும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். அவர்கள் மேற்கொள்ளும் எல்லா விஷயங்களிலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும்.
எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும். வேலை தேடுவோர் அல்லது வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள், வெளிநாடு வேலை வாய்ப்புகள் தேடி வரும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் யோகம் உண்டு. புதிய வரன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு 6 ஆம் இடத்தில் இருந்த சனி பகவான் இப்போது வக்கிரம் பெற்று கும்பத்திற்கு வருகிறார். 5 ஆம் இடத்தில் வந்து சனி பகவான் அமருவதால் இருக்கின்ற இடம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளுக்காக, பிள்ளைகளின் வளர்ச்சிக்காக சில விஷயங்கள் செய்வது, பயணங்கள் மேற்கொள்வது, கோயில்களுக்குச் செல்வது நல்லது, குலதெய்வ கோயில்களுக்குச் செல்வது போன்ற அமைப்பு உள்ளது.
பூர்வீகத்தில் நியாபகார்த்தமாக ஏதாவது செய்வீர்கள், வீடு வாங்குவது, வீடு கட்டுவது, வாகனங்கள் வாங்குவது, தான தர்மங்கள் செய்வது போன்ற யோகம் உண்டாகும். சனி பகவானின் பார்வை முதல் பார்வையாக மேஷத்தை பார்ப்பதால் கணவன், மனைவி, குடும்ப உறவுகளில் உடல்நிலையில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் உடனடியாக மருத்துவம் பார்ப்பது நல்லது. உடல்நலக் கோளாறுகளை தள்ளிப் போடுவதை தவிர்ப்பது நல்லது.
உழைப்புக்குத் தகுந்த லாபங்கள் கிடைக்கும். பெரிய கவலைகள், குற்றங்கள், குறைகள் தீரும். உழைப்பால் முன்னேறும் காலகட்டம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பேச்சு வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். யாரிடம் பேசினாலும் கவனமாகப் பேசுவது, கவனமாக வேலைகளை செய்வது நன்மை பயக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு சனி பகவான் 5 ஆம் இடத்தில் இதுவரை இருந்தார். இப்போது வக்கிர கதியாவதால் 138 நாட்களுக்கு 4 ஆம் இடத்துக்கான பலன்களை கொடுக்கப் போகிறார். படிக்கும் மாணவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். வீடு, மனை, கார் வாங்க காத்திருப்பவர்களுக்கு செட்டிலாகும் யோகம் உண்டாகும். சனி 6 ஆம் இடத்தைப் பார்ப்பதால் இதுவரைக்கும் இருந்து வந்த எதிரிகள் ஒழிவார்கள்.
கடன்களை கட்டக்கூடிய யோகம் உண்டாகும். தொலைதூரப் பயணங்கள் மூலம் வெற்றியைப் பெறுவீர்கள். இடமாற்றங்கள் உண்டாகும். வேறு ஊர்களுக்கு, வேறு இடங்களுக்கு, வெளிநாடுகளுக்குச் செல்லும் யோகம் உண்டாகும். வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு சுய தொழில், சொந்த தொழில் தொடங்கக்கூடிய யோகம் உண்டாகும். சொந்த தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கும்.
புதிய கிளைகளை தொடங்கும் யோகம் உண்டாகும். கூடுதலாக 10 பேருக்கு வேலை போட்டு கொடுக்கக்கூடிய எண்ணங்கள் உருவாகும். நில, புல ஆதாயங்கள் கிடைக்கும். உடன்பிறப்புகள், உற்றார் உறவினர்கள் மூலமாக ஒத்தாசைகள் உண்டாகும். சனி பகவானுடைய அடுத்த பார்வை 10 ஆம் இடத்தைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வண்டி, வாகனம் இயக்குபவர்கள் அது சார்ந்த தொழில் செய்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
மகர ராசியினருக்கு ஏழரை சனி முடிந்து விடுதலை பெற்றிருப்பீர்கள். இப்போது வக்கிர சனி ஏற்பட்டுள்ளதால் வரும் 138 நாட்களுக்கு ஏழரை சனி பாதிப்புகளை காணும் அமைப்பு உள்ளது. ஜூலை 26 முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை அதற்கான பலன்கள் கிடைக்கும் என்பதால் உங்களை தயார்படுத்திக் கொள்வது நல்லது. உங்களுக்கு ராசிநாதனே சனி பகவனாக இருப்பதால் மிகப்பெரிய துன்பங்கள், துக்கங்கள் ஏற்படாது.
பங்குச் சந்தை உள்ளிட்ட முதலீடுகளில் திட்டமிட்டு முதலீடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். இளையவர்களுடன் பிரச்சனை ஏற்பட்டாலும் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவி, குடும்ப உறவில் இணக்கமாகச் செல்வது நல்லது. பெரிய பாதங்கள் இந்த காலத்தில் ஏற்படாவிட்டாலும், அவரவர் பாதையில் செல்லட்டும் என்றும் விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை பயக்கும்.
குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். புதிய வேலை தேடுவோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத பண வரவு கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.


Click it and Unblock the Notifications
