தமிழகத்தின் மின்சார தேவை கிடுகிடு உயர்வு.. இதுவரை இப்படி நடந்ததே இல்லை! மின்வெட்டுக்கு நடுவே புதிய உச்சம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஒரு நாளைக்கான மின்நுகர்வு என்பது இதுவரை இல்லாத அளவுக்கு 472.263 மில்லியன் யூனிட்களாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி உள்ளது. கடந்த ஏப்ரல் 24ம் தேதி ஒருநாளுக்கான மின்நுகர்வு 471.456 மில்லியன் யூனிட்டாக இருந்த நிலையில் தற்போது அது முறியடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பநிலையால் மின்சார தேவை புதிய உச்சத்தை தொட்டுள்ள நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

tamil-nadu-daily-electricity-consumption-touches-to-all-time-high-with-472-263-mu-due-to-temperature

தமிழகத்தில் தென்மேற்கு பருவழை ஏமாற்றிவிட்டது. சில இடங்களில் மட்டுமே அவ்வப்போது பெய்த தென்மேற்கு பருவமழை லேசாக பெய்தது. தமிழகத்தின் பல இடங்களில் கண்ணாம்பூச்சி காட்டி சென்றுவிட்டது.

மழை போதிய அளவு பெய்யாதது, எல் நினோ சூழல் உள்ளிட்டவற்றால் பல மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக நீடித்து வருகிறது.
இதனால் மின்சார பயணன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தான் கடந்த ஏப்ரல் 24ம் தேதி தமிழ்நாட்டில் ஒருநாளுக்கான மின்சார நுகர்வு என்பது 471.456 மில்லியன் யூனிட்டாக இருந்தது. இதுதான் தமிழ்நாட்டில் ஒருநாளில் பயன்படுத்தப்பட்ட அதிகபட்ச மின்சார நுகர்வாக இருந்தது. இது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சராசரி மின்நுகர்வு கடந்த 15ம் தேதியில் 472.263 மில்லியன் யூனிட்களாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

வெப்பநிலை உயர்வால் பொதுமக்கள் வீடுகளில் ஏசி மற்றும் மின்விசிறிகளை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் மின்சார பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் தற்போதும் தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இப்பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டி உள்ளது.

குறிப்பாக வேலூரில் அதிகபட்ச வெப்பநிலையாக 41.6 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு வெப்பநிலை பதிவாகி உள்ளது. மதுரை மற்றும் திருத்தணியிலும் வெப்பநிலை 40°C-க்கு மேல் பதிவாகி வருகிறது. இதனால் மின்சார தேவையின் அளவு அதிகரித்துள்ளது. அதேபோல் சென்னையிலும் கடும் வெப்பம் நிலவி வருகிறது.

சென்னையில் அவ்வப்போது மழை பெய்தாலும் கூட நுங்கம்பாக்கத்தில் அதிகபட்ச வெப்பநிலை 39.4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானது. இது கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு ஜூலை மாதத்தில் சென்னையில் பதிவான மிக அதிகபட்ச வெப்பநிலையாகும். தற்போது தமிழகத்தில் பல இடங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வரும் நிலையில் மின்தேவை என்பது அதிகரிக்கும் நிலையே உள்ளது கவலைக்குரிய விஷயமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+