4 பஞ்ச்.. 2 குத்துப்பாட்டுக்கு கரெக்ட் ஆகுற ஊரு.. உனக்கு ரொம்ப தைரியம்பா.. தெறிக்கும் தவெக மீம்ஸ்!
சென்னை: தமிழக அரசியல் திமுக மற்றும் தவெக இடையில் மோதல் தொடர்ந்து வரும் சூழலில், சோசியல் மீடியாவிலும் விவாதங்கள் களைகட்டியுள்ளனர். இதனை வைத்து சாமானிய மக்கள் சோசியல் மீடியாவில் உருவாக்கி இருக்கும் மீம்ஸை பார்க்கலாம்.

மன்னன் படத்தில் கவுண்டமணி ரஜினியை பார்த்து, இருந்தாலும் உனக்கு ரொம்ப தைரியம்பா.. ஓட்ட கண்ணாடியை போட்டுகிட்டு இந்த லொள்ளு பண்றியே என்பார். அதில் வரும் கவுண்டமணியாக வட மாநில மக்களையும், ரஜினியை திமுகவாகவும் மாற்றி, இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம்பா.. ரெண்டு குத்துப்பாட்டு நாலு பஞ்ச் டயலாக்குக்கு கரெக்ட் ஆகுற ஊரை வச்சிக்கிட்டு 75 வருஷமா தம் கட்டி சமூகநீதி பேசி இருக்கீங்க பாரு என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அதைப் பத்தி மட்டும் பேசாதபா ரகம்.

லுங்கி பாய்ஸ் ராஜ் பிரியன், அவரின் நண்பரும் மும்பை இந்தியன்ஸ் ரசிகருமான ஹரியை போட்டு குஜிலி மஸ்த் செய்வார். அதில் வரும் ஹரியாக தவெகவையும், ராஜ் பிரியனாக திமுகவையும் மாற்றி, திரிஷா கேக் ஊட்டிவிட்ட போட்டோவை இன்னிக்கு ரிலீஸ் பண்ணா ஜாலியா இருக்கும்ல ஃபிரண்ட்ஸ் என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஆள விடுங்கடா கொய்யால ரகம்.

பரிதாபங்கள் சுதாகர் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது ஒரு முதியவரிடம் மாட்டிக் கொண்டு, "போதும்.. போதும்.. இன்னும் எத்தனை வாட்டி பெருசு பேசிக்கிட்டே வருவ" என்று கலாய்ப்பார். அதில் வரும் முதியவராக பெ.சண்முகத்தை மாற்றி, "திமுக - அதிமுக ஒரே கட்சியாக கூட செயல்படலாம்" என்று சொல்வதாகவும், அதற்கு சுதாகர், "போதும்.. உஷ்.. எத்தனை வாட்டியா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ரீல் அந்து போச்சு ரகம்.

ஹேங் ஓவர் படத்தில் வரும் ஆலன், பில்.. நிஜமா தான் சொல்றேன்.. நீ கொஞ்சம் யோசிச்சு பாரேன்.. என்று ஒரு விஷயத்தை சொல்வார். அதில் வரும் பைத்தியக்கார ஆலனாக தவெக ஆதரவாளரை மாற்றி, ஜஸ்ட் இமேஜின் பில்.. சட்டசபைல சண்ட வச்ச என்ன ஆகும்.. திமுக சைடுல எல்லாரும் வயசானவங்க.. ஆதவ் மட்டும் 10 பேரை அடிப்பான் என்று சொல்வதாகவும், அதற்கு பில், டேய்.. ஆலன்.. என்னடா லூசு மாதிரி ஒலறுர என்று சொல்வதாகவும், அதற்கு ஆலன் மீண்டும், நிஜமா தான் சொல்றேன்.. யோசிச்சு பாரேன்.. அண்ணா லியோ மார்க்கெட் பிஜிஎம் போட்டு எல்லாரையும் பொளந்தா எப்படி இருக்கும்னு சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அட லூசுப்பயலுகளா ரகம்.













Click it and Unblock the Notifications