தாஜ் ஓட்டலை வேடிக்கைப் பார்த்த நேபாள நாட்டவர் கோடீஸ்வரர் ஆன கதை.
காட்மாண்டு: இந்த ஆண்டிற்கான போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியலில், முதன் முறையாக நேபாளத்தைச் சேர்ந்த பினோத் சவுதாரி இடம் பெற்றுள்ளார்.
நேபாளத்தில் நூடுல்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் பினோத், நேபாளத்தின் மாருதி கார் நிறுவனத்தின் டீலராகவும் , தாஜ் ஓட்டல்களின் பங்குதாரர் ஆகவும் உள்ளார். இந்த நிறுவனத்தின் உற்பத்தி மையங்கள் இந்தியாவின் உத்தரகாண்ட், அசாம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் உள்ளது.
தனது வெற்றிக்கான சூத்திரத்தை பற்றி கூறுகையில்:
'எனது நூடுல்சை இந்தியா முழுவதும் உள்ளவர்கள் சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறேன். எனது தொழிற்சாலைகளை கென்யா, சீனா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் தொடங்கும் திட்டம் உள்ளது.
16 வயதில் இந்தியாவுக்கு முதன் முதலில் சென்றேன். அப்போது மும்பையில் உள்ள தாஜ் அரண்மனை வாசலில் நின்று மலைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் வந்தவர், நீ உள்ள போன, அடிப்பாங்கன்னு சொன்னார். இப்போதும் தாஜ் ஓட்டலில் தங்கும்போது அந்த இடத்தில சிறிது நேரம் நின்றுவிட்டுதான் வருவேன்' என்றார்.
இவரின் தாத்தா ராஜஸ்தானின் செகாவத் பகுதியிலிருந்து நேபாளத்திற்கு வேலை தேடி சென்றவர். இவரின் தந்தை காட்மாண்டுவில் 1968-ம் ஆண்டு முதன் முதலாக டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தியவர் என்பது குற்ப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications