சண்டிகர் அழகி நவ்னீத் கௌர் தில்லன் ஃபெமினா 'மிஸ் இந்தியாவாக' தேர்வு

ஃபெமினா மிஸ் இந்தியா அழகி போட்டியின் இறுதிச் சுற்று நேற்று இரவு நடந்தது. மிஸ் இந்தியா அழகி போட்டிகள் துவங்கப்பட்டு இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த போட்டிக்கு இந்தியாவின் மூளை முடுக்கில் இருந்து எல்லாம் அழகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
புனே, கோவா, இந்தூர், கொல்கத்தா, பெங்களூர், சண்டிகர் மற்றும் டெல்லியில் அழகிகள் தேர்வும் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நாடு முழுவதிலும் இருந்து 23 அழகிகள் தேர்வு செய்யப்பட்டு இந்த போட்டியில் கலந்து கொண்டனர். நேற்று நடந்த இறுதிச் சுற்றில் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார், டான்ஸ் மாஸ்டர் ஷியாமக் தவார், கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், பேஷன் டிசைனர் ரீத்து குமார், நடிகர் ஜான் ஆபிரகாம், நடிகைகள் அசின் மற்றும் சித்ராங்கடா சிங் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.
இதில் சண்டிகரைச் சேர்ந்த நவ்னீத் கௌர் தில்லன் ஃபெமினா மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டார். சோபிதா துலிபாலா மற்றும் ஜோயா அப்ரோஸ் ஆகியோர் அடுத்த இரண்டு இடங்களைப் பிடித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடனம் ஆடினர். பிரசவத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ஆடிய முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications