ஏப்ரல் 1 முதல் ஆம்னி பஸ்கள், லாரிகள் காலவரையற்ற ஸ்டிரைக்: மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

மூன்றாம் நபர் காப்பீட்டை ஏப்ரல் 1-ந்தேதி முதல் 107 சதவீதத்திற்கு மேல் உயர்த்தியுள்ளதை கண்டித்து, அதனை ரத்து செய்யக்கோரியும், லாரிகளுக்கு தேசிய பர்மிட் (நேஷனல் பர்மிட்) வழங்கப்பட்டுள்ளது போல சுங்கவரிக்கும் அனுமதி வழங்க வேண்டும் உள்பட 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆல் இண்டியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் வருகிற 1ம் தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் போராட்டத்திற்கு அறிவித்துள்ளது. இதில் ஆம்னி பஸ்களும் பங்கேற்கின்றன.
இந்த வேலை நிறுத்தத்திற்கு தென்னிந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன் முழு ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்குகிறது. எனவே, நாடு முழுவதும் உள்ள சுமார் 70 லட்சம் சரக்கு வாகனங்கள் ஏப்ரல் 1ம் தேதி நள்ளிரவு முதல் ஓடாது. தமிழகத்தில் சுமார் 12 லட்சம் லாரிகள் ஓடாது. இதன்மூலம் தினமும் ரூ.150 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்படும்.
இந்த நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில்,மத்திய போக்குவரத்துத்துறை செயலாளர் உட்பட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, மோட்டார் காங்கிரஸ் சார்பில், டீசல் விலையை 6 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே உயர்த்த வேண்டும், நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில், ஒரு வாகனத்திற்கு மாதம் ஒரு முறை வரி வசூல் செய்யும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் உடன்பாடு எட்டப்படாததால், திட்டமிட்டபடி ஏப்ரல் 1ம் தேதி முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சண்முகப்பா அறிவித்துள்ளார். இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
லாரி ஸ்டிரைக் தொடங்கினால் நாடு முழுவதும் தினமும் சுமார் ரூ.5 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் பாதிப்படையும். சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பிற இடங்களில் உள்ள துறைமுகங்களும் முடங்கும் சூழ்நிலை ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications