''பொது எதிரி ராஜபக்சே தான்; கருணாநிதி அல்லவே''.. ஜெ.வுக்கு கி.வீரமணி நினைவூட்டல்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபையில் இலங்கை மீது பொருளாதார தடை விதிப்பதற்கும், தனி ஈழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,' சென்னையில் நடந்த டெசோ மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்களில் இது முக்கியமானதாகும். அதற்கு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எடுத்துக்காட்டாக அமைவதாக உள்ளது. அதனை வரவேற்கிறேன்' என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில் ,'டெசோ தலைவர் கருணாநிதி பற்றிய விமர்சனத்தின் மூலம் நமது பொது எதிரி ராஜபக்சே என்பதற்கு பதில் இங்குள்ள அரசியல் தலைவர் கருணாநிதிதான் என்பது போன்ற விரும்பதகாத போக்கு ஏற்கத்தக்கது அல்ல', என்றும் கி.வீரமணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications