ஆண்டுதோறும் கருத்தடை மாத்திரைகளால் 20 இளம்பெண்கள் பலி : இது பிரெஞ்சு அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

Contraceptive pills kill 20 women a year in France
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் கருத்தடை மாத்திரைகளால் ஆண்டுதோறும் 20 இளம்பெண்கள் பலியாவதாக, அதிர்ச்சி அறிக்கை ஒன்றை அந்நாட்டின் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.

அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 'பிரான்சில் ஒவ்வொரு வருடமும் 42 லட்சம் பேர் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துகின்றனர். 1990-ம் ஆண்டுகளில் இருந்து ஜெர்மனியைச் சேர்ந்த பேயர் நிறுவனம் தயாரிக்கும் ‘டயான்-35' என்ற கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துகிறார்கள்.

இது அதிக வீரியம் மிக்கவை. ரத்தக்குழாய்களில் கட்டிகளை உருவாக்கி அடைப்பை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இது கருத்தடை மாத்திரை அல்ல. ஹார்மோனை கட்டுப்படுத்தி முகத்தில் பருக்கள் உருவாகாமல் தடுக்கக்கூடியது. இந்த மருந்து ஹார்மோனை கட்டுப்படுத்துவதால் கரு முட்டை உற்பத்தி ஆகாது என்று கருதி கருத்தடை மாத்திரையாகவும் டாக்டர்கள் பலர் பரிந்துரை செய்கிறார்கள்.

இதனால் ஆண்டுதோறும் 20 இளம்பெண்கள் உயிர் இழக்கிறார்கள். எனவே கடந்த ஜனவரி மாதம் முதல் பிரான்ஸ் அரசு ‘டயான்-35' மாத்திரையை கருத்தடை மாத்திரையாக பயன்படுத்தக்கூடாது என்று தடை விதித்துள்ளது' , இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் உலகளவில் 116 நாடுகளில் கருத்தடை மாத்திரையாக ‘டயான்-35' விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+