டெல்லி வந்தார் சுனிதா வில்லியம்ஸ்: விண்வெளிக்கு சமோசா எடுத்துச் சென்றாராம்
டெல்லி: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ் இன்று காலை டெல்லி வந்துள்ளார். டெல்லியில் உள்ள தேசிய அறிவியல் மையத்தில் பேசிய அவர் விண்வெளிக்கு சென்றபோது சமோசா எடுத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ் இன்று காலை டெல்லி வந்தார். அவர் டெல்லியில் உள்ள தேசிய அறிவியல் மையத்திற்கு சென்று உரை நிகழ்த்தினார். அங்கு அவர் ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகளுடன் உரையாடினார்.
தனது உரையின்போது அவர் இந்தியாவைப் பற்றியும், தனது விண்வெளி பயண அனுபவம் பற்றியும் பேசினார்.

விண்வெளிக்கு சமாசா கொண்டு போனேன்
விண்வெளிக்கு சென்றபோது இந்திய உணவான சமோசாவை எடுத்துச் சென்றதாக சுனிதா தெரிவித்தார்.

பகவத் கீதையை எடுத்துச் சென்றேன்
விண்வெளி பயணம் மேற்கொண்டபோது பகவத் கீதை, உபநிடதங்களை எடுத்துச் சென்று வாசித்ததாக அவர் தெரிவித்தார்.

அகமதாபாத்தை விண்வெளியில் இருந்து பார்த்தேன்
சுனிதாவின் தந்தை அகமதாபாத்தைச் சேர்ந்தவர். சுனிதா விண்வெளியில் இருந்து இந்தியா முழுவதையும் பார்த்துள்ளார். தனது தந்தையின் மாநிலத்தையும் பார்த்துள்ளார். அண்மையில் மேற்கொண்ட பயணத்தின்போது இந்தியாவின் கிழக்குப் பகுதியை பார்த்தாராம்.

மும்பை, இறுதியில் குஜராத்
சுனிதா வரும் 3 மற்றும் 4ம் தேதிகளில் மும்பையில் இருப்பார். அதன் பிறகு அவர் குஜராத் சென்று தனது தந்தையின் கிராமத்திற்கு செல்கிறார். முன்னதாக அவர் கடந்த 2007ம் ஆண்டில் இந்தியா வந்தபோது மும்பை ஐஐடியில் உரை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications