பாகிஸ்தான் தேர்தல்: 100 பார்வையாளர்களை அனுப்பும் ஐரோப்பிய யூனியன்
ப்ருஸ்செல்ஸ்: பாகிஸ்தானில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலை கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றியம் 100 பார்வையாளர்களை அனுப்ப முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கைகள் தலைவர் கேத்தரின் ஆஸ்டன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாகிஸ்தானில் வரும் மே மாதம் 11-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. புதிய அரசு அமையப்போகிறது. இந்த தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முதன்முறையாக ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் நடக்கப் போகிறது.
இந்த தேர்தலை கண்காணிக்க ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உறுப்பினரான மைகேல் காலெர் தலைமையில் 100 பேர் அடங்கிய குழு பாகிஸ்தான் செல்ல உள்ளது.
மைகேல் தலைமையிலான இந்தக் குழு சிறந்த முறையில் செயல்பட்டு பாகிஸ்தான் வாக்காளர்களர்களுக்கு தேர்தல் முறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications