கூட்டுறவுச் சங்க தேர்தலில் முறைகேடு: விஜயகாந்த் குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மத்திய மாநில அரசுகளின் மூலமும், வங்கிகளின் மூலமும் பணம் பட்டுவாடா செய்யும் வாய்ப்பை கூட்டுறவுச் சங்கங்கள் பெற்றுள்ளதால், அதிகாரிகள், தங்களுக்கு தேவையானவர்களுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பளித்தனர்.
கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்கள் முறையாக சேர்க்கப்படவில்லை. தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் அனைத்து வேட்பாளர்களுக்கும் முறையாக வழங்கப்படவில்லை.
இந்த ஊழலுக்கும், முறைகேட்டுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பிய போது அவர்களை பேச அனுமதிக்கவில்லை.
எனவே நீதிமன்றங்கள் தலையிட்டு தேர்தல்களை நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications