For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை இனப்படுகொலை குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வேண்டும் - வைகோ

Google Oneindia Tamil News

பெங்களூர்: இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ .

ஈழப்பிரச்சினைகளுக்காக ஓங்கிக் குரல் கொடுத்துவரும் ம்.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நேற்று பெங்களூரில் நடைபெற்ற ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அதில், ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும், ராஜபக்ச -வை உலக நாடுகள் இனப்படுகொலை குற்றவாளியாக அறிவித்து தண்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

Vaiko

மேலும், ‘இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்தியாவில் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். தனி ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' என வைகோ கூறினார்.

பொதுக்கூட்டத்திற்குப் பிறகு ,பெங்களூர் பிரஸ் கிளப்பில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதில், 'இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று வைகோ கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ.

English summary
MDMK general secretary Vaiko demands international free investigation on srilankan war crime . He said in a public meeting at Bangalore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X