செல்போனில் அப்படி யாரிடம் பேசுகிறாய்? டெல்லியில் காதலியை கத்தியால் குத்திய காதலன் கைது
டெல்லி: டெல்லியில் செல்போனில் பேசியது யார் என்பதை கூற மறுத்த காதலியை கத்தியால் குத்திய காதலன் கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் உள்ள நஜாஃபர்கர் பகுதியைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவர் 19 வயது வாலிபனை காதலித்து வருகிறார். அவர்கள் நேற்று மாலை 4 மணிக்கு தெற்கு டெல்லியில் உள்ள துவாரகா பூங்காவில் சந்தித்தனர். அப்போது சில காரணங்களால் தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து பேசினர். பின்னர் அவர்கள் பைக்கில் வீட்டுக்கு கிளம்பினர்.
வீட்டுக்கு செல்லும் வழியில் அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த பெண் யாருடனோ செல்போனில் பேசினார். செல்போனில் யாருடன் பேசுகிறாய் என்று காதலன் கேட்டதற்கு அந்த பெண் பதில் கூறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த காதலன் கத்தியால் காதலியின் முகம் மற்றும் கழுத்தில் 2 முதல் 3 முறை குத்திவிட்டு பைக்கில் அங்கிருந்து தப்பிவிட்டார்.
அந்த பெண்ணை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அப்பெண்ணை சிகிச்சைக்காக தெற்கு டெல்லியில் உள்ள ராவ் துலா ராம் மருத்துவமனையில் சேர்த்தனர்.
கத்தியால் குத்திய நபரை நேற்று மாலையே கைது செய்தனர். தங்களுடைய நண்பர் ஒருவருடன் தான் அந்த பெண் செல்போனில் பேசியதாகவும், அது தனக்கு பிடிக்கவில்லை என்றும் அந்த வாலிபர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications