டாக்டராக மாறிய வார்டுபாய்.. ஒரு வயது சிறுவனின் கை துண்டானது!

வார்டுபாயாக பணிபுரியும் பத்ரி, சிறுவன் சாதிக்கின் கைகளில் இருந்த சலைன் ஏற்றும் பைப்பை கத்தரியால் நறுக்க முயன்றபோது, தவறுதலாக சிறுவனின் விரலை நறுக்கி விட்டான். தன் தவறை உணர்ந்த பத்ரி, உடனடியாக வெட்டுப்பட்ட விரலை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டான்.
சாதிக்கின் தந்தை அல்லாரக்கா இது குறித்து கூறும்பொழுது, ‘ காய்ச்சலுக்காக 3 நாட்களுக்கு முன்பு என மகன் இங்கே அனுமதிக்கப்பட்டான். பூரண குண்மடைந்த நிலையில் நேற்று மாலை டிஸ்சார்ச் செய்வதாக கூறியிருந்தார்கள். கையில் இருந்த இண்ட்ராகாத்தை உருவினால் மட்டுமே, வீட்டிற்கு செல்ல முடியும் என்பதால் அதை உருவச் சொன்னோம். ஆனால் இப்போது எனது பையனின் கையையே இழக்கும் சூழல் உருவாகி விட்டது' என்றார்.
மேலும்,' நான் இதுகுறித்து மருத்துவ உயர் அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளைச் சந்தித்து இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதிசயம் எதுவும் நடைபெறவில்லை. எனது குழந்தை வாழ்நாள் முழுவதும் ஊணத்துடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டான்' என்று கண்ணீரோடு கூறினார்.
இது குறித்து மருத்துவ அதிகாரி ஆர்.கே.மகேஸ்வரி அளித்துள்ள பதிலில், ‘சாதிக்கின் பெற்றோர் வீட்டிற்கு செல்வதில் அவசரம் காட்டினார்கள். அதனால், தவறுதலாக வார்டுபாய் அவனது விரலை வெட்டி விட்டார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது' , என்றார்.
மருத்துவர்களின் கவனக் குறைவால், அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற அவலங்கள் அடிக்கடி அரங்கேறுவது வழக்கமாகி வருகிறது.
கலெக்டர் பானுபிரதாப் அட்டு தலைமையில் மூவர் கொண்ட குழு இது குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications