மதுரை: ஸ்டாலின் ஆதரவாளர்கள் 6 பேர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்த திமுக
சென்னை: மதுரை மாவட்ட மு.க. ஸ்டாலின் ஆதரவாளர்கள் 6 பேர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை திமுக மேலிடம் ரத்து செய்துள்ளது.
மதுரையில் நடைபெற்ற திமுக பொருளாளர் ஸ்டாலின் பிறந்த நாள் கூட்டத்தில் அழகிரியின் ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து அழகிரி ஆதரவாளர்கள் 15 பேருக்கு திமுக மேலிடம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் மு.க. அழகிரியின் பிறந்த நாள் விழாவில் ஸ்டாலின் ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவில்லை.. அவர்களுக்கெல்லாம் ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை என்று அழகிரி ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில் திடீரென மதுரை மாவட்ட தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் கோ.சந்திர சேகரன், பொதுக்குழு உறுப்பினர் எம்.ஏ.பழனிச்சாமி, கொட்டாம்பட்டி ஒன்றியத்தை சேர்ந்த எஸ்.சந்தானம், ஆடுதுரை, எஸ்.சுரேந்தர் மற்றும் மதுரை கிழக்கு ஒன்றிய வரிச்சியூரை சேர்ந்த எஸ்.முருகன் ஆகிய ஸ்டாலின் ஆதரவாளர்கள் அண்மையில் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தி.மு.க.வுக்கு எதிராகவும், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்ததாக கூறி தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் 6 பேரையும் நீக்கினார். நீக்கப்பட்ட அனைவரும் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள். ஸ்டாலின் ஆதரவு தி.மு.கவினர் நீக்கப்பட்டதால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் நீக்கப்பட்ட 6 பேரும் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கழக பணியாற்றிட அனுமதிக்குமாறு தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மனு அனுப்பினர். அவர்களது கோரிக்கையினை ஏற்று அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு இன்று முதல் தொடர்ந்து கழக பணியாற்றிட அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
முரண்டுபிடித்து வரும் மு.க. அழகிரியின் ஆதரவாளர்களை ஒருவழிக்குக் கொண்டுவரவே ஸ்டாலின் ஆதரவாளர்கள் நீக்கம் அறிவிப்பும் தற்போது ஒழுங்கு நடவடிக்கை ரத்து அறிவிப்பும் வெளியிடப்பட்டதாக தெரிகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications