கும்பகோணம் அருகே அம்மன் சிலை மீது கல்வீச்சு- பக்தர்கள் சாலை மறியல்!
கும்பகோணம்: கும்பகோணம் அருகே வீதியுலா வந்த அம்மன் சிலை மீது கல் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மூப்பகோவில் கிராமம் உள்ளது. இங்கு மூப்பாயி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது, சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மன் வீதியுலா நடைபெற்றது. மாட்டு வண்டியில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலையை வைத்து வீதி வீதியாக வலம் வந்தனர். அப்போது பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு நடந்தினர்.
இந்த நிலையில், ஜாமியா நகர் 3வது தெருவுக்கு நள்ளிரவில் சுவாமி வந்த போது அந்த தெருவில் உள்ள சிலர் அம்மன் ஊர்வலத்தை தெருவில் அனுமதிக்க மாட்டோம் என்றனர். இதனால் வீதியுலா ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும் தடுத்தவர்களுக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் நிலை உருவானது.
இந்த நிலையில் அம்மன் மீது சிலர் கற்களை வீசினர். அம்மன் சிலை மீது கல் வீசியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி நள்ளிரவு நேரத்தில் கும்பகோணம்- திருவையாறு சாலையில் பக்தர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த பாபநாசம் டிஎஸ்பி சீனிவாசன் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தார். இதனால் மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சுவாமிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications