'ஏழைகளுக்கு ஓர் குட்நியூஸ்': பில் கேட்ஸின் அறக்கட்டளையில் மேலும் 9 கோடீஸ்வரர்கள்
மியாமி: பில்கேட்ஸின் கோரிக்கையை ஏற்று மேலும் 9 கோடீஸ்வரர்கள் ஏழைகளுக்கு உதவ உறுதியளித்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய பணக்காரரான பில்கேட்ஸ், 'பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுன்டேசன்' என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம் பல அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும், ஏழைகளுக்கு உதவும் நிறுவனங்களுக்கும் நிதி உதவியை வழங்கி வருகிறார்.
ஏற்கனவே 105 பணக்காரர்கள் உறுப்பினர்களாக உள்ள நிலையில், நேற்று மேலும் 9 கோடீஸ்வரர்கள் இப்பட்டியலில் இணைந்துள்ளார்களாம்.

உதவும் உறுதிமொழி...
பில் கேட்ஸ், மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் வாரன் பப்பெட்டும் இணைந்து 2010-ம் ஆண்டு முதல் 'உறுதிமொழி அளிப்போம்' என்ற பிரசாரத்தை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே 105 பணக்காரர்கள்...
உலக பெரும் பணக்காரர்களை கொடை அளிக்க ஊக்குவிக்கும் விதமாக இந்த பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த பிரசாரத்தின் விளைவாக இது வரை 105 மிகப்பெரிய பணக்காரர்கள் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டு உதவ முன்வந்துள்ளனர்.

எப்போதும் உதவ வேண்டும்...
இவர்கள் தங்களது சொத்தில் ஒரு பகுதியினை ஏழைகளின் முன்னேற்றதிற்காக பயன்படுத்த வழங்குவதாக உறுதி மொழி அளித்துள்ளனர்.

மேலும் 9 கோடீஸ்வரர்கள்...
இந்த பிரசாரத்தின் மூலம் மேலும் 9 மிகப்பெரிய பணக்கார குடும்பங்களும், தனி நபர்களும் குறைந்த பட்சம் தங்களது சொத்துகளில் பாதியை நன்கொடையாக வழங்க உறுதி மொழி எடுத்துக் கொண்டதாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

வாழும் போதும்... வாழ்க்கைக்கு பிறகும்...
உறுதி மொழி ஏற்றவர்களிடம் இருந்து இந்த அமைப்பு பணத்தை நேரடியாக பெற்றுக்கொள்வதில்லை. மாறாக அவர்கள் வாழும் போதும் இறந்த பின்னும் அறப்பணிகளை செய்ய தார்மீக பொறுப்பை ஏற்றுக்கொள்ள செய்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications