இந்தியா-வங்கதேச எல்லை அருகே 15 வயது சிறுவனின் உடல் கண்டுபிடிப்பு

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணாநகர்: இந்தியா-வங்கதேச எல்லை அருகே 15 வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் நாதியா மாவட்டம் இந்தியா-வங்கதேச எல்லையில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாகஞ்ச் பகுதியில் 15 வயது சிறுவனின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் இறந்த சிறுவன் தரம்பூர் கிராமத்தில் உள்ள மாஜ்தியா ரெய்ல் பஜார் உயர் நிலைப் பள்ளியில் படித்த சௌரப் சிகாரி என்றும், அவன் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மாயமானதும் தெரிய வந்தது. சிறுவனின் உடல் பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எல்லை பாதுகாப்பு படையினர் தான் சௌரப் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகப்பட்டு அவனை அடித்துக் கொன்றுவிட்டனர் என்று உள்ளூர்வாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+