பாக்.பிரதமர் பதவியேற்பு விழா: நவாஸ் ஷெரீப் அழைப்பு… மன்மோகன்சிங் நிராகரிப்பு

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள நவாஸ் ஷெரீப்பிற்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்தியா பாகிஸ்தான் உறவை மேம்படுத்துவேன் என்ற உங்களது கருத்துக்கு, இந்திய மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உங்களுடனும், உங்களது அரசுடனும் இணைந்து பணியாற்ற தாம் ஆர்வமாக உள்ளதாக கூறியிருந்தார். மேலும் நவாஸ்ஷெரீப் இந்தியா வர வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்,
இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப்பிற்கு இந்தியா வர பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளது குறித்து பா.ஜ.க, கேள்வி எழுப்பி உள்ளது. பாகிஸ்தான் பிரதமரை இந்தியாவிற்கு அழைக்க மன்மோகன் சிங் மிகவும் அவசரப்படுவதாகவும், ஆனால் பாகிஸ்தானின் இந்தியா மீதான நிலைப்பாட்டில் என்ன மாற்றம் வரப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனவும், நற்பலன்கள் ஏற்படுமானால் அவரை அழைக்கலாம் எனவும் பா.ஜ., துணைத் தலைவர் பல்பீர் புன்ஞ் தெரிவித்துள்ளார்.
மேலும் நவாஸ் இன்னும் பதவியேற்பதற்கு முன் அவருக்கு இந்தியா வர அவசரமாக அழைப்பு விடுக்கப்பட்டதன் காரணம் என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
நவாஷ் ஷெரீப் அழைப்பு
இதனிடையே தனது பதவியேற்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கார்கில், மும்பை தாக்குதல்கள் போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவுடன் நல்லுறவை மேம்படுத்த முயற்சி எடுக்கப்படும். பிரதமர் மன்மோகன் சிங், என்னுடைய பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டால் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என கூறினார்.
மன்மோகன் நிராகரிப்பு
ஆனால் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நவாஸ் ஷெரீப் விடுத்த அழைப்பை நிராகரித்தார் மன்மோகன் சிங். முக்கிய விவகாரம் குறித்து ஆலோசிக்க இருப்பதால் மன்மோகன் சிங் பாகிஸ்தான் செல்லவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications