கிராமங்களில் 1 மணி நேரம்தான் கரண்ட் கட் !... ஜூனில் அதுவும் போய்ரும்! - நத்தம் விஸ்வநாதன்

Subscribe to Oneindia Tamil

Power cut has come down; will be wiped out by June, says minister
சென்னை: தமிழக கிராமங்களில் 1 மணி நேரம் மட்டுமே தற்போது மின்வெட்டு ஏற்படுவதாகவும், வரும் ஜூன் மாதம் முதல் அதுவும் படிப்படியாக குறைக்கப்படும் என்றும் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று மின்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, தே.மு.தி.க. உறுப்பினர் சேகர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 12 ஆம் தேதி முதல் மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது கிராமங்களில் 1 மணி நேரம் மட்டுமே மின்வெட்டு உள்ளது. வரும் ஜூன் மாதம் முதல் அதுவும் சரிசெய்யப்பட்டுவிடும். சென்னையில் தற்போது மின்வெட்டு முழுமையாக அகற்றப்பட்டுவிட்டது. என்றும் தெரிவித்தார்.

மின்கட்டணம் உயராது

மேலும் தமிழகத்தில் மின் கட்டணம் தற்போதைக்கு உயராது என்றும் தெரிவித்த அவர், மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில், மின் கட்டணத்தை உயர்த்த மின்சாரம் ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுத்தாலும், அதை தமிழக அரசு தாங்கிக் கொள்ளும் என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+