இப்படியும் ஒரு 'பிரா'ப்ளம்.... !
லண்டன்: பிரபல பெண்கள் உள்ளாடை வடிவமைப்பாளரான மிஷல் மோன் இரு பெரும் நம்பி்க்கை துரோகத்திற்குள்ளாக்கி பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார். முதலில் அவரது கணவர் அவரை விட்டுப் பிரிந்து விவாகரத்து செய்தார். பின்னர் அதே வேகத்தில், மிஷலின் அலுவலகத்தில் சீனியர் ஊழியராகப் பணியாற்றி வந்த சமந்தா பன் என்பவரை அதிரடியாக மணந்து அவரை வைத்து புதிய உள்ளாடை நிறுவனத்தைத் திறந்து மிஷலுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளாராம்.
பிரபலமான பெண்கள் உள்ளாடை வடிவமைப்பாளர்தான் மிஷல் மோன். அதிலும் பிரபலமான பிரா டிசைனர்.
இவரது வடிவமைப்பில் வெளியான பிராக்களுக்கு பெண்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

முதலில் விவாகரத்து
இவரது கணவர் பெயர் மைக்கேல் மோன். இவருக்கும், மிஷலுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து விவாகரத்து செய்தார் மைக்கேல்.

2வது போட்டி பிரா நிறுவனம்
அதன் பின்னர் மிஷலின் நிறுவனத்தில் மூத்த அதிகாரியாகப் பணியாற்றி வந்தவரும், மிஷலின் நெருங்கிய தோழியுமான சமந்தா பன் என்பவரை கவர்ந்திழுத்து அவரை வெளியே கொண்டு திருமணமும் செய்து இப்போது போட்டி நிறுவனம் ஒன்றையும் சமந்தாவுடன் சேர்ந்து தொடங்கி விட்டார்.

அதிர்ச்சியில் மிஷல்
மைக்கேல் தொடங்கியுள்ள இந்த புதிய உள்ளாடை நிறுவனத்தின் தலைமை உள்ளாடை வடிவமைப்பாளர் சமந்தாதான். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளார் மிஷல்.

தானே மாடல்
மிஷல் தனது உள்ளாடைகளுக்குத் தானே மாடலாகவும் இருந்து போஸ் கொடுத்து அசத்தியவர் ஆவார். 2010ம் ஆண்டு தனது உள்ளாடைகளுடன் அவர் கொடுத்த போஸ்கள் பெரும் பிரபலமாகின.

சொத்துக்கள் போச்சு
விவாகரத்து விவகாரத்தால் தனது சொத்துக்களை கிட்டத்தட்ட இழந்து விட்டார் மிஷல். தற்போது கிளாஸ்கோவில் உள்ள ஒரு ஹோட்டலில்தான் அவர் தங்கியுள்ளார்.

பறிபோகாத நம்பிக்கை
இத்தனையையும் இழந்தபோதிலும், நம்பிக்கைத் துரோகங்களை சந்தித்தபோதிலும் உடைந்து போய் விடவில்லை மிஷல். மாறாக, தனது நிறுவனத்தை சட்டப் போராட்டத்திற்குப் பின்னர் தன் பக்கமே தக்க வைத்துக் கொண்டுள்ளார். மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்காலம் குறித்துப் பேசுகிறார்.

நன்றி சொல்வேன்
சமந்தா குறித்து அவர் கூறுகையில், சமந்தா என் முன்பு இப்போது வந்து நின்றால் நான் தேங்க்யூ என்று ஒரு வார்த்தை மட்டுமே சொல்வேன். எனக்கு அவர் நல்லதுதான் செய்துள்ளார்.முன்பை விட இப்போது நான் பெரும் உற்சாகத்துடன் செயல்பட முடிகிறது என்கிறார் புன்னகையுடன்.
நம்பிக்கைத் துரோகங்கள் சில நேரம் வருத்தம், வலியைக் கொடுத்தாலும்... புதிய உத்வேகத்தையும் நமக்கு அளிக்கத் தவறுவதில்லை.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications