சென்னை வியாபாரி வீட்டில் 220 சவரன் நகை, ரூ.25 லட்சம் கொள்ளை
சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 220 சவரன் தங்க நகைகள் மற்றும் 25 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பருப்பு வியாபாரியான ஜெயராஜ், தண்டையார்பேட்டையில் மூன்றுமாடிகள் கொண்ட வீட்டில் கு/டும்பத்துடன் வசித்து வருகிறார். கீழ்பகுதியை அரிசி, தானியங்கள் வைக்கும் குடோனாக பயன்படுத்தி வருகிறார்.
உதகை சுற்றுலா
கூட்டுக்குடும்பமாக வசிக்கும் ஜெயராஜ் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோடை விடுமுறைக்காக உதகைக்கு சுற்றுலா சென்றிருந்தார். சுற்றுலா முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
போலீசாருக்கு புகார் அளித்த ஜெயராஜ், அவர்கள் வந்து சோதனை செய்தபோது ஒரு பீரோவில் இருந்த 220 சவரன் நகைகளும், 25 லட்சம் ரூபாய் பணமும் கொள்ளைபோது கண்டுபிடிக்கப்பட்டது. அதேநேரத்தில் மற்றொரு பீரேவில் இருந்த 50 சவரன் நகையும் 15 லட்சம் பணமும் திருடர்கள் கண்களில் தென்படாமல் தப்பியுள்ளது.
அழிக்கப்பட்ட கைரேகை
திருடவந்தவர்கள் மொட்டைமாடி வழியாக வீட்டிற்குள் புகுந்து பீரோ சாவியை சரியாக எடுத்துள்ளனர். சோப்பு போட்டு கைரேகளை அழிக்க முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டைப் பற்றியும், பீரோ சாவி இருந்த இடம் பற்றியும் நன்றாக தெரிந்தவர்கள்தான் இந்த கொள்ளைச் சம்பவத்தை நிகழ்த்தியிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள தண்டையார்பேட்டை காவல்துறையினர், கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். 40 லட்சம் ரூபாய் பணத்தை வங்கியில் செலுத்தாமல் வீட்டில் வைத்திருந்தது ஏன் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 220 சவரன் நகையும், 25 லட்சம் பணமும் கொள்ளைபோ சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ராணிப்பேட்டை வீட்டில் 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம்.. பீரோவை உடைக்காமலேயே ட்விஸ்ட் -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications