இந்தியாவின் பிரபலமான சில பேச்சிலர்கள்….

Subscribe to Oneindia Tamil

சினிமா, விளையாட்டு, அரசியல் ஆகிய மூன்று துறைகளில் இருக்கும் ஆணோ, பெண்ணோ பிரபலமானவர்களாத்தான் இருப்பார்கள். அவர்களின் குடும்பத்தினரைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் ஆர்வம் காட்டுவார்கள்.

இந்தியாவில் இரண்டு, மூன்று திருமணங்கள் செய்து கொள்வது சகஜமாக இருக்கும் இந்த கால கட்டத்தில் திருமணத்தைப் பற்றி நினைத்துப் பார்க்காமல் பேச்சிலராக இருக்கும் பிரபலங்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

சினிமா, அரசியல், தொழில்துறை போன்ற துறைகளில் வெற்றி பெற்று மக்களிடையே பிரபலமான பேச்சிலர்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

காமராஜர்

காமராஜர்

கறுப்பு காந்தி என்று புகழப்பட்ட காமராஜர் திருமணம் செய்து கொண்டால் அரசியல் வாழ்க்கை பாதிக்கும் என்று கூறி கடைசி வரைக்கும் பேச்சிலாராகவே இருந்து மக்களுக்காக வாழ்ந்தார்.

அடல் பிகாரி வாஜ்பாய்

அடல் பிகாரி வாஜ்பாய்

பாஜகவின் மூத்த தலைவர் வாஜ்பாய். இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். தற்போது 88 வயதாகும் இந்த தலைவருக்கு திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே எழுந்ததில்லையாம்.

ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்

ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்

விஞ்ஞானியாக இருந்து நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம். திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதால்தான் தன்னால் இந்த அளவிற்கு சாதிக்க முடிந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ரத்தன் டாடா

ரத்தன் டாடா

தொழில் துறையில் பிரபலமடைந்த ரத்தன் டாடாவிற்கு இப்போது 75 வயதாகிறது. ஆனாலும் அவர் பேச்சிலராகத்தான் இருக்கிறார். பயம் காரணமாகவே திருமணம் செய்து கொள்ளவில்லை என்று ஒருமுறை பேட்டியில் கூறியுள்ளார்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் இளைய தலைவர் ராகுல் காந்தி. நாளைய பிரதமர் என்று கட்சியினர் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் திருமணத்தைப் பற்றி பேச்சு கூட எடுப்பதில்லை.

சல்மான் கான்

சல்மான் கான்

பாலிவுட் உலகின் சூப்பர் ஸ்டார். பல நாயகிகளுடன் கிசு கிசு எழுந்தாலும் 47 வயதாகிவிட்டது இன்னமும் பேச்சிலர்தான். எப்படியோ திருமண வாழ்க்கையில் இருந்து தப்பிவிட்டேன். ஆனால் குழந்தைகள் என்றால் மிகவும் விருப்பம் என்று ரசிகர்களிடம் கூறியுள்ளார் சல்மான் கான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+