'கொஞ்சமாவது நேர்மை இருந்தால் பதவி விலகட்டும்!' - சீனிவாசனுக்கு நெருக்கடி தரும் சரத் பவார்!

ஐபிஎல் சூதாட்டம், அதற்கு கிரிக்கெட்டின் தலைமையே உடந்தையாக இருந்தது போன்றவை கிரிக்கெட் உலகை உலுக்கியுள்ளன.
கிரிக்கெட் வாரிய தலைவர் சீனிவாசனின் மருமகனே சூதாட்டத்தின் முக்கியப் புள்ளியாக இருந்தது அம்பலமாகியுள்ளது.
தார்மீக அடிப்படையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் என் சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன.
இதற்கு வலு சேர்ப்பது போல மத்திய விளையாட்டுத் துறையும், இந்த விஷயத்தில் என் சீனிவாசன் தார்மீக அடிப்படையில் சிந்தித்து முடிவு மேற்கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டது.
இன்னொரு பக்கம், பிசிசிஐயின் முன்னாள் தலைவரும், தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத்பவார், சீனிவாசனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
சீனிவாசன் மற்றும் குருநாத் மெய்யப்பனின் நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்குரியவை என்று அவர் ஏற்கெனவே கருத்து தெரிவித்திருந்தார். இதற்கிடையில் இன்று அவரது தேசியவாத காங்கிரஸ் சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில், "கிரிக்கெட் அதன் பெருமையை இழந்துவிட்டது. இது மிகப்பெரிய அவமானம். சீனிவாசனுக்கு கொஞ்சமாவது மனசாட்சி, நேர்மை இருந்தால் உடனடியாக பதவி விலக வேண்டும்," என்று தெரிவித்துள்ளது.
இதன் மூலம் சீனிவாசனின் பதவி கலகலத்துவிட்டது தெளிவாகிவிட்டது.
சஹாரா விலகல்..
மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஸ்பான்சரான சஹாரா பரிவார், 'சீனிவாசன் பதவியில் இருக்கும் வரை தங்களால் இந்திய அணிக்கு ஸ்பான்சர் செய்ய முடியாது' என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications