பிரதமராகும் தகுதி ஜெயலலிதாவிற்குத்தான் உண்டு: சரத்குமார்

Subscribe to Oneindia Tamil

Sarath
திருப்பூர்: இந்தியாவின் பிரதமராகும் தகுதி படைத்த ஒரே தலைவர் ஜெயலலிதா தான் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

அஇசமகவின் கொங்கு மண்டல நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டம் திருப்பூர், காங்கயம் ரோட்டிலுள்ள காயத்திரி ஓட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியதாவது:

40 தொகுதிகளில் வெற்றி

மரக்காணம் கலவரத்துக்கு சில தலைவர்களின் நாவடக்கம் இன்மை தான் காரணம். இந்த சம்பவத்துக்காக முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் மக்கள் நலனுக்காகத்தான் இருக்க வேண்டுமே தவிர, மக்களுக்கு இடயூறாக இருக்கக் கூடாது.

முதலமைச்சர் ஜெயலலிதாவோடு, உறுதுணையாக நின்று, வருகிற பாராளுமன்ற தேர்தலையும் சமத்துவ மக்கள் கட்சி சந்திக்கும். இந்தியாவை ஆளக்கூடிய தகுதி படைத்த ஒரே தலைவர் ஜெயலலிதா தான். அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஜெயலலிதா பிரதமர் ஆவார். அதற்கு எங்கள் கட்சி முழுவீச்சில் செயல்படும்.

மக்கள் தரிசனம்

மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் தொடங்கப்பட்டது எங்கள் கட்சி. தொடக்கத்தில் மக்கள் தரிசனம் என்று ஒரு திட்டத்தை ஆரம்பித்தோம். ஆனால் அதை சரியாக செயல்படுத்த முடியவில்லை. எனவே, இனி வரும் காலங்களில் நான் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள், அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்களை நேரில் சந்தித்து குறைகள் கேட்க உள்ளோம்.

எங்கெங்கு கட்சி சரியாக செயல்படுகிறது, எங்கெங்கு சரியாக செயல்படவில்லை என்று கண்டறிந்து, நிர்வாகிகளைகளை எடுக்கவும், தொண்டர்கள் சிறப்பாக செயல்பட வாய்ப்பு அளிக்கவும், அவர்களின் கருத்துக்களை கேட்கவும் இது போன்ற கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கொங்கு மண்டலம் எப்போதுமே உறுதியாக செயல்படக் கூடிய மண்டலமாக இருந்தாலும், இது போன்ற கூட்டம் நடத்தும் போது, தொண்டர்கள் இன்னும் சிறப்பாக செயல்படுவார்கள் என்று சரத்குமார் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+