இந்தியாவில் வாழும் ஈழத் தமிழருக்கு இந்திய குடியுரிமை....: கருணாநிதி கோரிக்கை

இது தொடர்பாக அவர் வெளியிட்ட கேள்வி- பதில் பாணியிலான அறிக்கை விவரம்:
கேள்வி: 2 லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கக்கூடிய முக்கிய மசோதாவுக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளிக்கப்போவதாக சொல்லப்படுகிறதே?
பதில்: அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி 1 கோடியே 10 லட்சம் வெளிநாட்டினர் வாழ்ந்து வருவதாகவும், அவர்களில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் இந்தியர்கள் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு குடியுரிமை அளிக்க வகை செய்து மசோதா தயாரிக்கப்பட்டு, அமெரிக்க செனட் சபையின் நீதித்துறை குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைத்திருந்தார்கள். நீதித்துறை உறுப்பினர்கள் அதைப் பரிசீலித்தபோது, மசோதாவுக்கு ஆதரவாக 13 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் விழுந்திருக்கின்றன. 8 வாக்குகள் அதிகம் பெற்று மசோதா நீதித்துறை குழுவின் ஒப்புதலையும் பெற்றுள்ளது. அடுத்தகட்டமாக இந்த மசோதா செனட் சபையின் ஒப்புதலுக்கு செல்லும். 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபையில் 60 உறுப்பினர்களின் ஆதரவை பெற்று மசோதா நிறைவேற வேண்டும்.
தற்போது அமெரிக்காவில் 2 லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்க முடிவு செய்திருப்பதைப்போல, இந்தியாவிலும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமையினை - நிரந்தரமாக பாதுகாப்போடு வாழ்வதற்கான அனுமதியினை இந்திய அரசு வழங்கிட முன்வர வேண்டும் என்பது தான் நமது விருப்பமும், வேண்டுகோளும் ஆகும்.இங்குள்ள ஈழத் தமிழர்களில், விரும்புவோர்க்கு குடியுரிமை வழங்குவது, அவர்களது எதிர்காலத்திற்கு நாம் தருகின்ற உத்தரவாதமாக அமையும் என்று கருணாநிதி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications