சேலம் – கரூர் பயணிகள் ரயில்… அதிமுக, திமுகவினர் கொடியசைத்து தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் - கரூர் நகர மக்களின் பல ஆண்டுகால கனவான பயணிகள் ரயில் சேவை இன்றுமுதல் தொடங்கியது. சேலத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சியைச் சேர்ந்த அனைவரும் ஒன்றாக கொடியசைத்து உற்சாகமாக தொடங்கிவைத்தனர்.

சேலம்-கரூர் ரயில் பாதைத் திட்டம் 1997-98 பட்ஜெட் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. 1997ல் அப்போதைய பிரதமர் தேவேகவுடா சேலம் ஜங்ஷனில் அடிக்கல் நாட்டினார். 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த பணி, மத்தியில் ஆட்சி மாற்றம், சேலம் ரயில்வே கோட்டப் பிரச்னை என தொய்வு ஏற்பட்டது. இதற்காக எம்.பிக்களும் நாடாளுமன்றத்தில் அவ்வப்போது குரல் கொடுத்து வந்தார்கள்.

இந்த ரயில்பாதைக்காக 346.71 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, 85 கிலோ மீட்டர் அகல ரயில் பாதை ரூ.850 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் சரக்கு ரயில் செல்ல சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு பாதையின் உறுதி தன்மை பரிசோதிக்கப்பட்டது. இதற்கு பிறகும் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. அதையடுத்து ராசிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் உடனடியாக சேலம்-கரூர் பயணிகள் ரயிலை விடவில்லை என்றால் உண்ணாவிரம் இருப்பேன் என அறிவித்தார்.

திமுக, அதிமுக தொண்டர்கள்

இதையடுத்து மத்திய ரயில்வே வாரியம் சார்பில் இன்று சேலம்-கரூர் பயணிகள் ரயில் தொடக்க விழா நடைபெற்றது. இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த சபாநாயகர் தனபால், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எம்.பி. செம்மலை, கே.வி.ராமலிங்கம், தங்கமணி, தம்பிதுரை, எஸ்.கே.செல்வம் என அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.தி.மு.க. சார்பில் கே.பி.ராமலிங்கம், ஆதிசங்கர் எம்.பி. ஆகியோர் வந்திருந்தனர்.

ரயில் நிலையத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு தரப்பினரும் அவரவர் கட்சி கொடிகளை காட்டி கோஷம் போட்டார்கள். இதனால் அங்கு பதற்றம் நிலவியதை அடுத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டார்கள்.

இறுதியாக தி.மு.க., அ.தி.மு.க. கொடிகளை ஒன்றாக காட்டி வழி அனுப்பி வைத்தார்கள். ரயிலிலேயே தி.மு.க.வை சேர்ந்த எம்.பி. ராமலிங்கமும், ஆதிசங்கரும் சென்றார்கள்.

27ம் தேதி முதல்...

சேலத்தில் இருந்து கரூர் செல்வதற்கு பஸ்ஸில் ரூ.60 கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் இந்த ரயிலில் கட்டணமாக ரூ.20 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

இந்த ரயில் 27ஆம் தேதி முதல் தினமும், காலை 6 மணிக்கு சேலத்தில் இருந்து கிளம்பி, 8 மணிக்கு கரூர் சென்றடையும். மீண்டும் 8.20க்கு கரூரில் இருந்து கிளம்பும் ரயில், 10.20 மணிக்கு சேலம் சென்றடயும். அதேபோல் மாலை 5.30 மணிக்கு கிளம்பி, 7.30க்கு கரூர் சென்றடையும் இந்த ரயில், 7.50க்கு அங்கிருந்து கிளம்பி 9.50 மணிக்கு சேலம் வந்தடையும். தினமும் இயங்கும் சேலம்-கரூர் ரயில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயங்காது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+