அமெரிக்க நீதிபதியாக சண்டிகர் சீனிவாசன் நியமனம் - அதிபர் ஒபாமா பாராட்டு
நியூயார்க்: அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட சர்கியூட் நீதிமன்ற நீதிபதியாக இந்தியரான ஸ்ரீகாந்த் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி வழக்கறிஞர் ஸ்ரீகாந்த் சீனிவாசன் சண்டிகாரில் பிறந்தவர். 46 வயதாகும் அவரை கொலம்பியா மாவட்ட சர்கியூட் நீதிமன்ற நீதிபதியாக அதிபர் ஒபாமா நியமித்தார். இதற்கு நீதித்துறை செனட்சபை கமிட்டி விவாதித்து 97-0 என்ற வாக்கெடுப்பில் எதிர்ப்பு ஏதுமின்றி ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. அமெரிக்காவின் மிகப் பெரிய நீதிமன்றங்களில் ஒன்றில் இந்தியருக்கு கிடைத்த பெருமை இது. இந்த நீதிபதி பதவிக்கு தேர்வு பெற்ற தெற்கு ஆசியாவைச் சேர்ந்த முதலாவது நபரும் ஸ்ரீகாந்த் சீனிவாசன்தான்.
ஸ்ரீகாந்த் சீனிவாசனின் நியமனத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஸ்ரீகாந்த் அமெரிக்காவில் பிரின்சிபல் உதவி சொலிசிடர் ஜெனரல் உள்பட பல பொறுப்புகளில் 20 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றியவர். அமெரிக்க நாட்டு வரலாற்றில் தெற்கு ஆசியாவை சேர்ந்தவர்களில் சீனிவாசனே முதல் முறையாக நீதிபதியாகும் பெருமையை பெற்றுள்ளார். பண்பாளரான அவர் அமெரிக்காவின் தனிச்சிறப்பை பாதுகாக்க உழைப்பார். நீதித்துறையில் அவர் தனி முத்திரை பதிப்பார் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications