மாவோயிஸ்டுகளின் 'மே 25' தாக்குதலுக்கு 4 காங்கிரஸ் தலைவர்கள் உடந்தை: என்.ஐ.ஏ.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 25ந் தேதி நடத்தப்பட்ட மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உட்பட 28 பேர் பலியாகினர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் தாக்குதல் நாளில் 4 முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த 4 தலைவர்களும்தான் காங்கிரஸ் நடத்திய யாத்திரையின் பாதை குறித்த விவரங்களை மாவோயிஸ்டுகளுக்குத் தெரிவித்து வந்துள்ளனர்.
தொடர்ந்தும் குறிப்பிட்ட 4 தலைவர்களின் தொலைபேசி அழைப்புகள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக தேசிய புலனாய்வு அமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகிக்கு இத்தாக்குதலில் தொடர்பு இருக்கிறது என்று மத்திய பிரதேச பாஜகவினர் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சி நடத்தும் ராமன்சிங் தலைமையிலான அரசு காங்கிரஸின் பரிவர்த்தன் யாத்திரைக்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தால் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடந்து இருக்காது என்று அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது..மேலும் அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நேற்று ராய்ப்பூரில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 39 பேரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சத்தீஸ்கர் மாநில பாஜக அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஒட்டுமொத்தமாக அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்வது எனவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications