அம்மா கேண்டீன்: இட்லியைச் 'சாப்பிட்ட' பொங்கல்!
சென்னை: அம்மா உணவகங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய உணவு வகைகளுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 33,398 பொங்கல் விற்பனை விற்பனையாகியுள்ளதாம்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் தொடங்கப்பட்டுள்ள அம்மா உணவகத்தில் ஆரம்பத்தில் இட்லி, சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் ஆகியவை விற்கப்பட்டு வந்தன. தற்போது, கூடுதலாக பொங்கல், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவை முதலமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிமுகப் படுத்தப்பட்டது.
காலையில் இட்லியுடன் கூடுதலாக பொங்கலும், மதியத்தில் சாம்பார் மற்றும் தயிர் சாதங்களுடன் கூடுதலாக கறிவேப்பிலை அல்லது எலுமிச்சை சாதமும் விற்கப்படுகிறது.

அசத்தும் பொங்கல்...
அதிலும் குறிப்பாக பொங்கல் விற்பனை அமோகமாம். ஞாயிற்றுக்கிழமை தொடங்கி திங்கள்கிழமை காலை வரை 200 அம்மா உணவகங்களில் மொத்தம் 33,398 பொங்கல் விற்பனை செய்யப்பட்டுள்ளனவாம்.

வெரைட்டி ரைஸ்...
மதிய வேளையில் 18,146 கறிவேப்பிலை சாதமும், 20,542 எலுமிச்சை சாதமும் விற்பனையாகி உள்ளன. இன்று முதல் மதிய வேளைகளில் சாம்பார் மற்றும் தயிர் சாதங்களுடன் கறிவேப்பிலை அல்லது எலுமிச்சை சாதம் வழங்கப்பட இருக்கிறது. நேற்று மட்டும் இரண்டு சாதங்களுமே வழங்கப்பட்டன.

டேஸ்ட் மாறும் மக்கள்...
புதிய சாத வகைகள் மற்றும் பொங்கலின் வருகையால் இட்லி, சாம்பார், தயிர் சாதங்களின் விற்பனை கொஞ்சம் சரிந்துள்ளதாம்.

டாப்பில் இருந்த இட்லி...
வழக்கமாக விற்பனையாகும் 3.30 லட்சம் இட்லியும், 30,000 தயிர் சாதமும், 60,000 சாம்பார் சாதமும் தற்போது முறையே சுமார் 2.50 லட்சம், 35,000, 28,000 எனக் குறைந்துள்ளதாம்.

பொதுமக்கள் மகிழ்ச்சி...
ஆரம்பம் தொட்டே, மெனுவை அதிகப் படுத்த கோரிக்கை விடுத்து வந்த பொதுமக்களுக்கு தற்போது மகிழ்ச்சி அதிகரித்துள்ளது என்பது க்யூவில் நிற்கும் மக்களைப் பார்க்கும் போதே தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications