13 நாள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது: வீடு திரும்பிய டாக்டர் வெங்கடேஷ்
சென்னை: சசிகலாவின் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த் தோழி சசிகலா. அவரது அண்ணன் சுந்தரவதனத்தின் மகன் டாக்டர் வெங்கடேஷ். சென்னை ஆழ்வார்பேட்டையில் கிளினிக் வைத்து நடத்தி வருகின்றார்.
இவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளராக ஜெயலலிதா நிமித்தார். பின்பு 2010 ம் வருடம் அந்த பொறுப்பில் இருந்து டாக்டர் வெங்கடேஷ் அதிரடியாக நீக்கப்பட்டார்.
தஞ்சை அருகே விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை சேதப்படுத்தியதாகக் கூறி டாக்டர் வெங்கடேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுத்து அவரது சார்பில் அவருடைய வழக்கறிஞர் வடிவேல் தஞ்சை இரண்டாவது ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதை கடந்த 6 ம் தேதி விசாரித்த மாஜிஸ்திரேட் மூர்த்தி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில் டாக்டர் வெங்கடேஷ் சார்பில் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி சேது மாதவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு மீதான விசாரணையை ஜூன் 10 ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் தஞ்சை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து தஞ்சை செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் 13 நாள் சிறைவாசத்தை முடித்துக் கொண்டு சென்னை சென்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications