ராணுவ ரகசிய கடிதம் மாயம்: 6 அதிகாரிகள் சிக்குகிறார்கள்
டெல்லி: ராணுவ கடிதம் ஒன்று மாயமாகியுள்ளதால் இந்திய-சீன எல்லையில் உள்ள செயல்பாடுகள் மற்றும் ராணுவத்தின் ரகசிய செயல்பாடுகள் குறித்த தகவல்கள் கசிந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக 6 அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள தேஸ்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 4வது ராணுவ படைப்பிரிவில் இருந்து ராங்கியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 21வது மலை பிரிவு ராணுவ அதிகாரிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய-சீன எல்லை விவகாரம், ராணுவ ரகசியங்கள் குறித்து கடிதம் அனுப்பப்பட்டது.
அந்த கடிதம் கிடைக்கப்பெற்ற ஒரு வாரத்திற்குள் மாயமானது. அந்த கடிதம் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ராணுவ ரகசியங்கள் அடங்கிய கடிதம் மாயமானது தொடர்பாக 6 வீரர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் மீது ராணுவ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
கடிதம் மாயமானபோது வி.கே. சிங் ராணுவ தளபதியாக இருந்தார். கடிதம் கிடைக்கப்பெற்ற 21வது மலைப் பிரிவை அப்போது நிர்வகித்த மேஜர் ஜெனரல் என்.எஸ். கெய் தற்போது பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள பதின்டாவை தலைமையிடமாகக் கொண்ட 10வது பிரிவை நிர்வகித்து வருகிறார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications