ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணி முறிந்தது - 19ம் தேதி மெஜாரிட்டியை நிரூபிக்கிறார் நிதீஷ்

நிதீஷ் குமார் வீட்டில் கூட்டம்
முன்னதாக நிதீஷ் குமார் வீட்டில் ஐக்கிய ஜனதாதள தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூடியது. அதில் பாஜக கூட்டணியை முறி்த்துக் கொள்வது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக, அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார் நிதீஷ் குமார். இதில் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்கள் யாரும் பங்கேற்கவில்லை. புறக்கணித்து விட்டனர்.
இதுகுறித்து மூத்த பாஜக தலைவர் மங்கள் பாண்டே கூறுகையில், கூட்டணி குறித்து முதல்வர் எந்த விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை. இந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் போய் என்ன புண்ணியம் என்றார்.
ஆளுநருடன் சந்திப்பு
இக்கூட்டத்திற்குப் பின்னர் ஆளுநர் மாளிகைக்கு விரைந்தார் நிதீஷ் குமார். அங்கு ஆளுநர் யஷ்வந்த் ராவ் பாட்டீலைச் சந்தித்து பாஜக கூட்டணியிலிருந்து விலகுவது தொடர்பான விளக்கத்தை அவர் அளித்தார்.
மேலும் தனது அரசு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் ஆளுநரிடம் தெரிவித்தார்.
பாஜக அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்க
ஆளுநரை சந்தித்தபோது தனது அமைச்சரவையில் உள்ள 11 பாஜக அமைச்சர்களையும் டிஸ்மிஸ் செய்யுமாறு நிதீஷ் குமார் கேட்டுக் கொண்டாராம். மேலும், பீகார் சட்டசபையில் புதன்கிழமையன்று தனது பெரும்பான்மை பலத்த நிரூபிக்கத் தயாராக இருப்பதாகவும், அன்றைய தினம் சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுமாறும் அவர் கேட்டுக்கொண்டாராம்.
சிறுபான்மை அரசானது
பாஜகவுடன் கூட்டணியை முறித்ததால், நிதீஷ் குமார் அரசு சிறுபான்மை அரசாக மாறியுள்ளது. அங்கு பெரும்பான்மைக்குத் தேவையான பலம் 122 ஆகும். ஆனால் நிதீஷ் கட்சியிடம் 118 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர்.
ஆனால் சுயேச்சை எம்.எல்.ஏக்கள் அங்கு 6 பேர் உள்ளனர். காங்கிரஸும் ஆதரவு தரும் என்று தெரிகிறது. எனவே ஆட்சி கவிழும் வாய்ப்புக்கு இடமில்லை என்பதால் நிதீஷ் குமார் தரப்பு துணிச்சலாக பாஜகவை உதறியுள்ளது.
அடுத்து சட்டசபையில் நிதீஷ் குமார் தனது அரசின் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications