மார்பெலும்பை உடைத்து... 5 வயது தங்கையைக் கொன்ற ‘பாசக்கார’ அண்ணன்
நியூயார்க்: டபிள்யூ.டபிள்யூ. எப்' பார்த்திருக்கிறீகளா? பார்ப்பவர்கள் வயிற்றிலே புளியைக் கரைக்கும் அளவிற்கு பயங்கரமாக அடித்துக் கொள்வார்கள். அமெரிக்காவிலும், அதே பாணியில், 13 வயது சிறுவன் ஒருவன் ,விவரமறியாத தனது 5 வயது தங்கையை கைகளால் குத்தியே கொன்றுள்ளான்.
கார்ட்டூன் முதற்கொண்டு சண்டையிடும் காட்சிகள் தான் ஊடகங்கள் வழியாக குழந்தைகளைச் சென்று சேர்கின்றன. அப்படித்தான், .அமெரிக்காவின் நியூ ஒர்லியன்ஸ் பகுதியில் வாழும் 13 வயது சிறுவன் ஒருவனும் மல்யுத்தப் போட்டிகளின் ரசிகனாம்.
சம்பவத்தன்று, டிவியில் மல்யுத்தம் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனுக்கு நிஜத்திலும் அதே போன்று சண்டை போட ஆசை வந்துள்ளது. அப்போது அவனருகில், அவனுக்கு தங்கை உறவு முறை உள்ள 5 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள். தடாலடியாக அவள் மீது பாய்ந்த சிறுவன், அச்சிறுமியை கட்டிலில் தள்ளி, டி.வி.யில் காட்டப்படுவதைப் போலவே அந்த சிறுமியின் வயிற்றில் சரமாரியாக குத்துகளை விட்டுள்ளான்.
சிறுமி மீது அமர்ந்துக்கொண்டு தனது முழங்கையால் மார்பு, தொண்டை ஆகியவற்றின் மீது மாறி, மாறி தாக்கியுள்ளான். வலி பொறுக்காமல் அச்சிறுமி கதறியதை கேட்டு, ஓடிவந்த அவளின் தாயார் அச்சிறுமியை ஆஸ்பத்திரிகு தூக்கிக் கொண்டு ஓடினார். ஆனால், பரிதாபம் அவளைக் காப்பாற்ற இயலவில்லையாம்.
பிரேத பரிசோதனையில் சிறுமியின் மார்பு எலும்பு முறிந்து, ஈரலில் ஏற்பட்ட ரத்தக் கசிவினால் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அச்சிறுவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளானாம்.
நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட டபிள்யூ.டபிள்யூ. ஈ நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம், தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதோடு, இந்த படுகொலைக்கு தங்களது நிகழ்ச்சிகளை காரணமாக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுக்குத் தாங்க குழந்தைகளை வன்முறைக் காட்சிகளை பாக்க விடக்கூடாதுனு சொல்றது...
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications